Episode 16

104 6 2
                                    

ஒருவழியாக இரண்டு மாலைகள் ஈசனுக்காக தொடுக்கப்பட்டன, மாலை பூஜையும் சிறப்பாக தொடங்கியது ...... நிறைந்த தீபங்கள் ஒளி வீச, மணியோசையும் கீதமாய் ஒலிக்க, மாதவனும் மீராவும் தொடுத்த மாலையோடு,ரகுபதியும் நயனாவும் தொடுத்த மாலையும் ஈசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு ,அற்புத காட்சியாக அமைந்தது ஈசனின் தீப ஆராதனை🙏....‌‌..

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு வேண்டுகோள், ருத்ரனின் நலனுக்காக பிரார்த்தித்த நயனா, ....‌அப்படியே திரும்பி, கண்களை மூடிக் கொண்டு ஈசனை பிரார்த்தித்து நின்ற ரகுபதியை பார்த்தாள்......

"இறைவா இதுவரை ருத்ரனின் நலனை பற்றி மட்டுமே என் மனம் சிந்தித்து வந்தது, இப்போது இன்னொருவரின் நலனையும் என் மனம் வேண்டுகிறது,..... ஆதலால் அரசர் ரகுபதி வேண்டுவது எதுவாயினும், அதை அவருக்கு வழங்கிவிடு"  என்று மனதிற்குள் பிரார்த்தித்தாள் நயனா

அடுத்தது ரகுபதியின் பிரார்த்தனை

"இறைவா, இதுவரை ருத்ர தேசத்தின் நலன் மட்டுமே என் வேண்டுதலாக இருந்தது,....... ஆனால் ,இப்போது என் மனம் நயனாவின் அன்பை பெற ஏங்கி நிற்கிறது , நயனாவுக்கும், எனக்கும் இடையேயான பந்தம் இப்பிறப்பில் தொடங்கியது அல்ல என்பதை என்னால் உணர முடிகிறது......

எனினும் என் வேண்டுதல் இதுவே, இப்பிறப்பிலும், இனி எடுக்கப்போகும் பிறவிகளிலும் நயனாவின் காதலுக்குரியவன் நானாக தான் இருக்க வேண்டும்........ அதே போல், என்றும் என் காதலுக்குரியவள் நயனாவாகத்தான் இருக்க வேண்டும்" என மனதார பிரார்த்தித்து நின்றான்

இவ்வாறு அனைவரின் பிரார்த்தனையோடு, ஈசனின் அருளும் சேர..... பூஜைகள் நன்முறையில் நிறைவடைந்தது

மாதவனும் மீராவும் ஆலய பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்தனர்

பவானியை அவள் வீட்டில் விட்டுவிட்டு, மற்ற அனைவரும் அரண்மனையை அடைந்தனர்

ரகுபதியை பார்த்தவாறே, தன் அறையை நோக்கி நடந்தாள் நயனா😍.... ஆலயத்தில் நிகழ்ந்த சுப நிகழ்வுகள் அவள் கண் முன் நிழலாடியது,ஒருவித நிம்மதி அவளுக்குள் உண்டானது

ராமநயனம் Où les histoires vivent. Découvrez maintenant