Episode 14

120 6 6
                                    

ஏதோ சிந்தனையோடே ருத்ரனின் அறை நோக்கி சென்று கொண்டிருந்தாள் நயனா,அவள் முகத்தில் இனம் புரியா ஆனந்தம் குடிகொண்டிருந்தது

ருத்ரனின் அறைக்குள் நுழைந்தபோது,....எழுதப்பட்ட ஓலையை சிறு கயிற்றால் கட்டிக்கொண்டிருந்தான் ருத்ரன்

"யாருக்கு ஓலை அனுப்புகிறாய் ருத்ரா?..."நயனா கேட்டாள்

நயனா வந்ததை இப்போது தான் ருத்ரன் கவனித்தான்,சமாதானத்தோடே பேசினான்,"பவானிபுரிக்குதான் ஓலை அனுப்புகிறேன்..."

சற்றே குழப்பமுற்றாள் நயனா," நாம் ருத்ர தேசத்தின் விருந்தினராய்,இங்கு சில தினங்கள் வசிப்போம் என்று,ஏற்கனவே ஓலை அனுப்பிவிட்டாய் அல்லவா?...மீண்டும் எதற்கு ஓலை?...."

லேசாய் தடுமாறினான் ருத்ரன்,ஏனெனில் இது ரகுபதி மற்றும் நயனாவின் திருமணம் பற்றிய ஓலை...அதை பற்றி கூறினால் நயனா என்ன சொல்வாளோ?....என்ற தயக்கம் அவனுக்குள்

"அது வேறொன்றும் இல்லை,ஒருவேளை பவானிபுரியில் ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால்,எனக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்று ஓலை அனுப்புகிறேன்"ருத்ரன் சமாளித்தான்

ருத்ரனின் வார்த்தைகள்,நயனாவுக்கு நம்பும்படியில்லை,எனினும் அவளுக்கு சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை

"சரி,...அரசர் ரகுபதியிடம் மன்னிப்பு வேண்டினாயா?....."பேச்சை மாற்றினான் ருத்ரன்

நந்தவனத்தில் நடந்த நிகழ்வுகள்,நயனாவின் கண்முன் நிழலாடியது.....அவள் இதயத்தின் புன்னகை அவள் இதழ்களிலும் லேசாய் வெளிப்பட்டது.....அதை ருத்ரன் கவனித்தான்.....அவனுக்குள்ளும் ஒரு சிறு ஆனந்தம் எட்டிப்பார்த்தது....

"நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் கூறவில்லையே...."ருத்ரன் கூறினான்

சற்றே தன்னிலை உணர்ந்த நயனா..."மன்னிப்பு கேட்டுவிட்டேன்,அவரும் என்னை மன்னித்து விட்டார்"மென்மையாக கூறினாள்

"நல்லது..."என்று கூறிய ருத்ரன்,நயனாவின் கையை கவனித்தான்....."இந்த மோதிரம்....."என்றவாறே நயனா அணிந்திருந்த மோதிரத்தை பார்த்தான்......

ராமநயனம் Where stories live. Discover now