பள்ளிக்கூட மணி ஒலித்தது....நயனா வந்து கொண்டிருந்தாள்.......மோகித்தின் முகத்தில் மலர்ச்சி.....நயனாவும் அவனை பார்த்தாள்.....அதே புன்னகை......மோகித்தை நோக்கி அவள் நகர....சட்டென குறுக்கிட்டாள் உதயா........யாரென்று தெரியாமல்,என்னவென்று புரியாமல் திருதிருவென முழித்தாள் நயனா.....
"நேத்ரா.....என்ன உனக்கு தெரியுதா?.."தவிப்போடே நயனாவின் தோள்களை பற்றினாள் உதயா
சற்றே திடுக்கிட்டாள் நயனா...."நீங்க யாரு?...என்ன விடுங்க....."
நயனாவின் இந்த வார்த்தைகள் உதயாவின் மனதை,சுருக்கென்று குத்தியது.....உடைந்து போய்விட்டாள்.....இருப்பினும் விடுவதாய் இல்லை.....
"நேத்ரா.....நல்லா என்ன பாரு......"தாயாய் தவித்தாள் உதயா
"என் பேரு நயனா....என்ன விடுங்க...."அச்சத்தில் நயனாவின் கண்கள் கலங்கி விட்டது......சிறுபிள்ளை அல்லவா.....
நிலையை உணர்ந்த மோகித்,அவர்களை நோக்கி வேகமாக நகர்ந்தான்......சந்துருவும் தான்.....
மோகித்தை பார்த்ததும்....அவனை இறுக அணைத்துக் கொண்டு.....பயத்தில் அழுதாள் நயனா,அவனும் அவளை அரவணைத்துக்கொண்டான்.....அதை கண்ட உதயாவின் இதயம் நொறுங்கிப்போனது.....தாயை கண்டு பிள்ளை அஞ்சினால்,எந்த தாய் தாங்கிக் கொள்வாள்......
உடைந்த மனதோடு அவள் அங்கிருந்து நகர.....அவள் கையை பிடித்தான் மோகித்,அவளின் மனவேதனை அவனுக்கு புரிந்தது.....வலியோடு நீரும் நிறைந்த அந்த கண்களால்,அவனை நிமிர்ந்து பார்த்தாள் உதயா.....
'நான் பாத்துக்குறேன்....'என்பதாய் கண்ணசைத்தான் மோகித்
மண்ணில் தன் மூட்டை ஊன்றியவாறு,நயனாவின் முன் நின்றான் மோகித்....."என்னாச்சு நயனா....ஏன் அழுற?..."
"இவங்க யாருண்ணே தெர்ல....என்னென்னவோ பேசுறாங்க.....எனக்கு ரொம்ப பயமா இருக்கு அங்கிள்....."சிணுங்கினாள் நயனா
"எதுக்கு பயப்படுற.....இவங்க என்னோட ஃப்ரெண்டு தான்......பேரு உதயா.....இவங்களுக்கு உன்ன மாதிரியே ஒரு குட்டி தங்கச்சி இருந்தா.....அவ பேரு தான் நேத்ரா......சின்ன வயசுலயே காணாம போயிட்டா......உன்ன பாத்த உடனே,இவங்களுக்கு அவ ஞாபகம் வந்துடுச்சு.....அதான் அப்டி நடந்துகிட்டாங்க.......நீ பயப்படுற அளவுக்கு வேற எதுவும் இல்ல......."மோகித் எடுத்துக்கூற ,நயனாவும் சற்றே சமாதானம் கொண்டாள்......