வருடங்கள் இரண்டு கழிந்திருக்கும்.....ரகுபதி நாடு திரும்பவில்லை.....அவனை குறித்த எந்த தகவலும் இல்லை.....அவனை எதிர்பார்த்தே நாட்களை கடத்தினான் மாதவன்........
நேத்ராவும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள்.....அவளுக்கு வைத்தியம் அளிப்பதிலும்,மாதவன் அதிக கவனம் கொண்டிருந்தான்......
பணிகள் அதிகம் செய்திருந்ததால்....அசதியில் உறங்கிக் கொண்டிருந்தான் மாதவன்......அன்று வந்த கனவில்,....கானகம் நடுவில்,நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது,ரகுபதி அடி மேல் அடி வைத்து சென்று,அந்த நெருப்பில் இறங்கினான்..........
"ரகுபதி......"கூச்சலிட்டவாறு தூக்கத்திலிருந்து விழித்தான் மாதவன்........பயத்தால்,அவன் முகமெங்கு வியர்வை துளிகள் நிறைந்திருந்தது......
அவனது குரல் கேட்டு ஓடி வந்தாள் மீரா......."என்ன ஆயிற்று,...ஏன் இத்தனை பதட்டம்...."பதட்டத்தோடே கேட்டவாறு...அவனருகில் அமர்ந்தாள்
"ரகுபதி...ரகுபதிக்கு ஏதோ ஆபத்து...."சிறு குழந்தை தவிப்போடு பேசினான் மாதவன்
"அவ்வாறு நடக்காது.....நீங்கள் ஏதேனும் கனவு கண்டிருப்பீர்கள்...."மீரா கூற...சற்றே நிலை உணர்ந்தான் மாதவன்...எனினும் அச்சம் அகலவில்லை
"ஆம்....கனவுதான்.....ஆனால்,ரகுபதிக்கு ஏதோ நேரப்போகிறது.....நான் அவனை உடனே காண வேண்டும்.....ஆம்.....நான் உடனே புறப்படுகிறேன்...."என்றவாறு அவசர,அவசரமாக.....எழுந்து சென்றான் மாதவன்...
"சற்று பொறுங்கள்....மாமா எங்கு சென்றுள்ளார் என்பதை அறியாமல்,அவரை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்....."அவனை தடுக்க முயற்சித்தாள்......
"நிச்சயம் அவன்,அரசர் சந்திரதயாவை காணத்தான் சென்றிருப்பான்.....அவரை கண்டுபிடித்து விட்டால்......ரகுபதி இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளலாம்.......நீ உடனே சென்று,பவனை அழைத்து வா"என்றவாறு வேகமாக நடந்தான் மாதவன்......என்ன செய்வதென்று அறியாமல்,தன் மகள் நேத்ராவின் நிலையை எண்ணி கலங்கி நின்றாள் மீரா.....