குட்டி நயனாவையும் ரகுவையும் எண்ணி நொந்துகொண்டான் மோகித்.......
சீதாவோ இரவின் தென்றலில் ராமை எண்ணி களித்தவண்ணம்,ஸ்ருதிக்கு அருகே படுத்திருந்தாள்........அவளுக்கு தூக்கமே வரவில்லை,ராமை காணும் நொடிக்காக அவள் ஏங்கி தவித்துக் கொண்டிருந்தாள்.........
ஒரு கட்டத்தில் தூக்கம் அவளை ஆட்கொண்டது......கனவிலோ,காளிமலையும்.....காளியின் வானுயர்ந்த கற்சிலையும்......ஜீவ சிற்பமும் தான் தெரிந்தது......."அம்மா....."என்ற,குழந்தையின் அழுகுரல் கேட்டு.....பதறி எழுந்தாள் சீதா......அவள் முகமெல்லாம் வியர்த்துப்போயிருந்தது.......அவள் ஆற்ற வேண்டிய கடமையின் அவசரத்தை,பிரபஞ்சம் அவளுக்கு உணர்த்தியது போலும்.........
அதே இரவில்...அதே கனவில்......."அப்பா......"என்ற குரல்,ராமின் கனவை ஆட்கொண்டது.....அவனும் பதறியவாறு எழுந்து கொண்டான்......அவன் முகத்திலும் வியர்வை ஆறாக வடிந்து கொண்டிருந்தது........சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்,நயனாவின் அறையை நோக்கி சென்றான்......
எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல்,தேவதை போல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் நயனா.....குட்டி நயனா🤗......
மெல்ல அவள் அருகே சென்றவன்,அவள் தூக்கம் கலையாதவாறு அவள் தலைகோதி உச்சி முகர்ந்தான்........அவன் மனமும் சிந்தனையில் ஆழ்ந்தது......
மறுநாள் பொழுதில் கல்லூரி நிழலில் சந்துருவை நோக்கி வந்து கொண்டிருந்தான் மோகித்..........
"சந்துரு......"மோகித் அழைக்க அவனை பார்த்தான் சந்துரு
"என்னடா....."சந்துருவின் குரலிது
"நீ ராமோட அகாடமில சேர்றதுக்கு நான் பேசிட்டேன்......சாட்டர் டே,சன் டேல நீ அங்க போய்டு சரியா?..."மோகித் கூற....கொட்டாவி விட்டு சொடுக்கு போட்டான் சந்துரு
சற்றே எரிச்சலடைந்தான் மோகித்...."டேய்....நான் எவ்ளோ பெரிய விஷயம் சொல்றேன்....அசால்டா இருக்க....."
"சனி ஞாயிறு அகாடமி போணும் அவ்ளோ தானே?.....அதுக்கு எதுக்கு இவ்ளோ சீன் போடுற....."சந்துரு கூறினான்