நொடிகள் மெல்லிய பூக்களின் இதழ்களை போல்....இதமாய் நகர்ந்து கொண்டிருந்தன......ராமின் நெஞ்சோடு இறுகிப்போயிருந்தாள் சீதா......
அந்த உணர்ச்சி பெருக்கிலிருந்து தன்னிலை திரும்ப வெகுநேரம் ஆகியிருந்தது இருவருக்கும்.....
நாவில் வார்த்தைகள் எழாததால்,ராமின் விழிகளை பார்த்து சொக்கி நின்றாள்.....அவனும் தான்......
ஒருவழியாக வாய்திறந்து மெல்ல பேசிவிட்டாள்......
"உங்களுக்கு....உங்களுக்கு எல்லா ஞாபகமும் வந்துடுச்சா?....."அத்தனை எதிர்ப்பார்ப்பு அவள் கண்களில் இருந்தது,அவனது பதிலுக்காக.....
அவளின் கண்களை பார்த்தவாறே,அவள் கன்னத்தை தன் ஒரு கைக்குள் அடக்கி.....மெல்ல சிரித்தான் ராம்....அந்த சிரிப்பிற்க்குள் அத்தனை வேதனை இருந்தது
"எனக்கு என்னோட பதினாறு வயசுலயே,எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு........"ராம் கூறும்போது,சீதாவிற்க்கு பேரதிர்ச்சியாக இருந்தது
சந்துருவுக்கும் மோகித்திற்க்கும் அவர்களுக்கு நடுவே நின்றிருந்த உதயாவிற்க்கும் கூட இது பேரதிர்ச்சியாகவே இருந்தது........ஆம் அவர்கள் ஏற்க்கனவே அவ்விடத்தை அடைந்திருந்தனர்......
"தோ பார்றா.....கதைல ட்விஸ்டு....."சந்துருவின் குரல்
"எனக்கு ஆரம்பத்துலயே இந்த டவுட்டு இருந்தது....."மோகித்தின் குரல்....ஆனால் இருவரும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை
இருவரையும் அங்கும் இங்கும் பார்த்தாள் உதயா......
"அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சுடுச்சே.......என்ன கொண்டுபோய் வீட்டுல விட்ருங்களேன்....ப்ளீஸ்.....எங்க அப்பாவ நெனச்சா எனக்கு பயமா இருக்கு"அடுத்த பிரச்சனையை அவள் யோசிக்க தொடங்கியிருந்தாள்.....அதாவது,அவள் தந்தையை பற்றி......
"எவ்வளவு நல்ல விஷயம் நடந்துருக்கு.....இந்த நேரத்துல போய் உன் அப்பாவ ஞாபக படுத்துற....நீயே போ.....நான் போய் கத கேக்க போறேன்.....ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு......"என்றவாறு அவர்களை நோக்கி சென்றான் சந்துரு,சோகத்தின் உருவாயிருந்த சந்துருவும் தன்னிலை திரும்பிவிட்டான் போலும்