இரு குழந்தைகளும் அழகாய் கட்டிலில் படுத்திருந்தன.....பவானியும் மீராவும்....அருகில் அமர்ந்திருந்தனர்.....ரகுபதியோடு அங்கு வந்தான் ருத்ரன்......
ரகுபதியை பார்த்ததும் பவானியின் விழிகளில் நீர் நிறைந்தது........மெல்ல அருகில் வந்தான் ரகுபதி....ஆனந்த தடுமாற்றத்தில் மகளை எடுத்து அவன் கையில் தந்தாள் பவானி,பூரிப்போடே ஏந்திக்கொண்டான் ரகுபதி......
தயக்கத்தோடே....."என்னை மன்னித்துவிடுங்கள் மாமா.....,அன்று நான் அவ்வாறு ஒரு முடிவு எடுத்தது மிகப்பெரும் தவறு......"கலங்கி நின்றாள் பவானி
அவளின் தலையை கோதியவாறே,தன் கோபம் தணிந்ததை உணர்த்தினான் ரகுபதி....அனைவரின் முகத்திலும் சிறுபுன்னகை....அன்பின் பரிமாற்றம்,அழகாய் அமைந்தது
கூறியவண்ணம்,நிபந்தனைப்படி ருத்ரனும் பவானியும் தங்கள் மகனை,ரகுபதிக்கு தானமளித்தனர்.....இப்போது அக்குழந்தையின் மீதுள்ள முழு அதிகாரத்தையும் கொண்டவன் ரகுபதி......பவன ருத்ரன் என,அவனுக்கு பெயர் சூட்டினான் ரகுபதி......அவனை தனது வாரிசாகவும்,ருத்ர தேசத்தின் அடுத்த அரசனாகவும்,அறிவித்தான்.....
தொடர்ந்து,ருத்ரனும் பவானியும் புறப்படுவதற்க்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன........ருத்ரன் மட்டும் தனிமையில் வானத்தை பார்த்தவாறு,நயனாவின் நினைவுகளில் மூழ்கியிருந்தான்....
"ருத்ரா....."ரகுபதியின் குரல் கேட்டு,அத்திசை நோக்கினான் ருத்ரன்
"வாருங்கள்......"ருத்ரனின் குரலிது
"இன்றே பவானிபுரி திரும்ப வேண்டுமா என்ன?....சிறிதுகாலம் இங்கு வசிக்கலாமே....."ரகுபதி கேட்டான்
லேசாய் புன்னகைத்தான் ருத்ரன்..."இல்லை அரசே....நாட்டில் பணிகள் பல உள்ளன.....அதோடு,செய்யப்பட்ட தானத்தில் இருந்து,தூரத்தில் இருப்பதே....நன்மை பயக்கும்....."
அவன் வார்த்தைகள் ரகுபதிக்கு புரிந்தது.....அதற்க்கு மேல் அவனை கட்டாயபடுத்த விரும்பவில்லை.....
"ருத்ரா....நீ எனக்கு செய்தது பேருதவி....அதோடு,இன்னொரு உதவியும் நீ எனக்கு செய்ய வேண்டுகிறேன்......"ரகுபதி கூற....புரியாமல்,அவன் முகம் பார்த்தான் ருத்ரன்