"இங்க பாரு சீதா.....என்ன பாரு...."என்றவாறு சீதாவின் முகத்தை நிமிர்த்தினான் சந்துரு
"அவருக்கு ஒரு வேள கல்யாணம் ஆயிருந்தா?.....அத நாம ஏத்துக்குட்டு தான் ஆகணும்.....நமக்கு வேற வழி இல்ல......ஆனா,உன் குழந்தய காப்பாத்த....நாம அவர தேடி போய்தான் ஆகணும்....."எடுத்துரைக்க முயன்றான் சந்துரு
"ஆனா....என்னால அத,தாங்கிக்கவே முடியல.....எனக்கு எதுவுமே பிடிக்கல.....வாழவே பிடிக்கல சந்துரு...."கதறினாள் சீதா
"என்ன பேசுற சீதா......நீ முதல்ல அழுவுறத நிறுத்து.......அழாத....."கண்ணீரை துடைத்தவாறே கூறினான் சந்துரு
"நான் இப்போ என்ன பண்ணுவேன் சந்துரு...."குழந்தையாய் கேட்டாள் சீதா
சந்துருவிடம் பதில் இல்லை.....எனினும் சமாளிக்க முயன்றான்......."நீயா அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திராத.....எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடு.....என்ன பண்றதுன்னு யோசிப்போம்.....இப்போ என்கூட வா...."
"இல்ல சந்துரு.....நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன்......நீ கிளம்பு....."சீதா கூற.....தயங்கி நின்றான் சந்துரு
அவன் தயக்கம் சீதாவுக்கு புரிந்தது....."பயப்படாத சந்துரு.....நான் எந்த தப்பான முடிவும் எடுக்கமாட்டேன்......"சீதா கூற....மெல்ல அங்கிருந்து நகர்ந்தான்
வீட்டின் உள்ளே வந்தவன்....ஸ்ருதியை தேடினான்.....சட்டென அவளும் முன்னே வந்து நின்றாள்
"யார தேடுறீங்க?....."சந்துருவின் கண்களில் தடுமாறியவாறே கேட்டாள் ஸ்ருதி
"அது...அது.....நான்"என் லேசாய் நா தடுமாற....."உன்ன தான் தேடினேன்...."சட்டென்று கூறினான்
"எதுக்கு...."மென்மையான குரலில் கேட்டாள் ஸ்ருதி
"சீதா பக்கத்துலேயே இரு எப்பவும்......எப்பவும்...."அழுத்தி சந்துரு கூற.....என்னவென்று தெரியாவிடிலும்,ஏதோ காரணம் உள்ளது என்பதை புரிந்துகொண்டவாறு.....தலையசைத்தாள் ஸ்ருதி.....
அவளும் சீதாவோடே இருந்தாள்......வாடிய அவள் முகமே,ஸ்ருதிக்கு பல கதை உரைத்தது.....