ஜோதிடர் சீதாவின் ஜாதகத்தையும் ஸ்ருதியின் ஜாதகத்தையும் பார்த்து கணிக்க.....அவர் என்ன சொல்ல போகிறாரோ,எந்த எதிர்ப்பார்ப்பில் அமர்ந்திருந்தனர் ராஜனும் சுகுணாவும்.......
ஒருவழியாக கணித்துவிட்டு,பேச தொடங்கினார் அவர்...."உங்க சின்ன பொண்ணு ஸ்ருதியோட ஜாதகம் அமோகமா இருக்கு.....நினச்ச வாழ்க்கைய வாழபோறா.....வேற கொற ஒண்ணும் இல்ல.....ஆனா...."சற்றே யோசித்தவாறு,சீதாவின் ஜாதக கட்டங்களை மீண்டும் பார்த்தார் அவர்....
"என்னாச்சு ஐயா....சொல்லுங்க....."ராஜனின் குரலிது
"உங்க மூத்த பொண்ணு சீதா ஜாதகத்த பாக்கும்போது,அவளோட வாழ்க்கைக்காக அவ ரொம்பவே போராட வேண்டியிருக்கும்.....முந்தைய ஜென்ம கணக்குகள முடிக்க வேண்டியிருக்கும்.....அதெல்லாம் அவ சமாளிச்சுருவா....அவ நட்பு வட்டம் நல்லாருக்கும்.....ஆனாலும்...."மீண்டும் அவர் தயங்க....பெற்றோர் மனம் லேசாய் பரிதவித்தது
"என்னன்னு சொல்லுங்க ஐயா...."சுகுணா கூற..
"உங்க மூத்த மகளுக்கு பெரிய கண்டம் ஒண்ணு இருக்குறதா,கட்டம் சொல்லுது......அவ உயிருக்கே ஒரு ஆபத்து இருக்கு"ஜோதிடர் கூற...
"கண்டமா?....என்ன கண்டம் ஐயா.....ஏற்க்கனவே பல வேதனைங்களுக்கு அப்புறமா,இப்போதான் அவ நல்லாருக்கா.....நீங்க என்னன்னா இப்டி சொல்றீங்க?....."தவித்தாள் சுகுணா....
"இதெல்லாம் வெறும் கணிப்பு தாம்மா....எல்லாத்துக்கும் மேல,கடவுள்னு ஒருத்தன் இருக்கான்...அவன் பாத்துப்பான்......"பெற்றோரின் தவிப்பை உணர்ந்து,ஆறுதலாய் பேசினார் ஜோதிடர்
"இதுக்கு எதாச்சும் பரிகாரம் இருக்காய்யா?..."ராஜன் கேட்டார்
"இதுக்கு பரிகாரம் சொல்ல எனக்கு தெரியல.....ஆனா ஒன்னு,முந்தைய ஜென்மத்துலயே கடந்துருக்க வேண்டிய கண்டம்,விதியால இந்த ஜென்மத்துலயும் தொடருது.......ஒண்ணு பண்ணுங்க....பசிச்சவங்களுக்கு சாப்பாடு போடுங்க.....இயலாதோருக்கு உதவி பண்ணுங்க.....நாம செய்யுற புண்ணியங்கள் தான்,எப்பேற்பட்ட தோஷத்துக்கும் பராகாரமாகும்....பயப்பட வேண்டாம்.....தெய்வம் உங்கள காக்கும்....."ஜோதிடர் கூறி முடிக்க....கலக்கத்தோடே தவித்திருந்த,சுகுணாவின் கைகளை ஆறுதலாய்,இறுக பிடித்தார் ராஜன்......