Episode 24

97 7 3
                                    

"மாதவா........ சத்தம் அந்த திசையில் இருந்து தான் வருகிறது, வாருங்கள்.... சென்று பார்க்கலாம்......" ரகுபதி கூறி முன்னேற இருவரும் அவனை தொடர்ந்தனர்.........🐴 அருகில் செல்ல செல்ல அபலை குரலின் ஒலி அதிகமாகிக் கொண்டே சென்றது

அந்த இடத்தை அடைந்த போது, அனைவரும் சற்று திகைத்து நின்றனர்..... ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதறல் ஓசை அது😰.......

தனித்திருந்த அவள், வலி பொறுக்க இயலாதவளாய், கதறி கொண்டிருந்தாள்.......அதை பார்த்து பதறிய மூவரும் தத்தம் குதிரையிலிருந்து இறங்கி அவளுக்கருகில் ஓடி சென்றனர்........

நயனாவோ அப்பெண்ணின் தலையை எடுத்து தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்........

"தாங்கள் யார்?..... இத்தகைய சூழ்நிலையில் இந்த அடர்ந்த வனத்தில் அதுவும் இந்த இரவு வேளையில் எப்படி வந்தீர்கள்?....." பதட்டத்தோடு மாதவன் கேட்க

"இப்போது அதை கேட்டு அறிவதற்கான சமயம் இல்லை மாதவா‌....... நீ உடனே அவரின் உடல்நிலை என்னவென்று அறிந்து, உரிய வைத்தியத்தை துவங்கு........ உடனே அவரை அரண்மனைக்கு அழைத்து செல்ல வேண்டும்" ரகுபதி எடுத்துரைத்தான்

ரகுபதியின் கூற்று சரி எனவே பட்டது இருவருக்கும்

"இருப்பினும், இந்நிலையில் இவரை குதிரையின் மீது அமர்த்தி அழைத்து செல்வது சாத்தியமில்லை........ கானகத்திற்குள் நாம் வெகு தொலைவு வந்துவிட்டோம்........ ஆகையால் விரைந்து அரண்மனைக்கு அல்ல, நகருக்குள் கூட செல்ல இயலாது...." நயனா கூறினாள்

சற்றே யோசித்த ரகுபதி "நீ கூறுவதும் சரிதான் நயனா..... எனில், மாதவா..... நீ தான் இப்போது என் நம்பிக்கை, நீ தான் இப்பெண்மணியையும் அவர் வயிற்றில் உள்ள குழந்தையையும் காப்பாற்ற வேண்டும்....." என்றவாறே மாதவனை நோக்கி நின்றான் ரகுபதி

மாதவனும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் தலையசைத்தான்

"என்னை பற்றிய கவலையை விடுங்கள்....."என்ற அந்த பெண்ணின் குரல் கேட்டு மூவரும் அவளை கவனித்தனர்,....... வலியில் துடித்தவாறு,கடினப்பட்டு பேச முற்பட்டு கொண்டிருந்தாள்

ராமநயனம் Where stories live. Discover now