திருமண சடங்குகள் அனைத்தும் ருத்ரதேச மரபு மற்றும் பவானிபுரியின் மரபு இரண்டுக்கும் பொதுவாக வண்ணமயமாக 🌹💐 நடந்து கொண்டிருந்தது......கூடவே,காதலிடம் கதைக்க காரணம் தேடி அலைமோதும் புத்தியும்,கன்னியவளின் ஓரப்பார்வையும் என,.... நீலன் வைஷ்ணவியின் வாழ்வில் காதல் தன் இதழை விரிக்கும் தருணங்கள் அழகு❤️😉.....
திருமண நாளும் வந்தது......
எங்கும் கோலாகலம் நிறைந்திருந்தது,ஆனந்தமும் தான்❤️........மேருதன் ருத்ரனின் கையில் பவானியின் கைபிடித்து கொடுக்க....மங்கள மேளங்கள் முழங்க,அட்சதை ஆசியாய்பொழிய நன்முறையில் நடைபெற்றது திருமணம்.......
அனைவரின் மனமும் ஆனந்தத்தில் திழைக்க,பவானி மட்டும் ...ரகுபதியை பார்த்தவாறு கலக்கம் கொண்டாள்,அதை உணர்ந்த ருத்ரன்,ஆறுதலாய் அவள் கையை பற்றிக் கொண்டான் .....அச்சமயத்தில் கூட ரகுபதியின் மனம் இரங்கவில்லை....ஆனால்,அவர்கள் இருவரின் நல்வாழ்விற்காக,ஈசனை மனதார பிரார்த்தித்துக் கொண்டான்.............பெரியோர்களிடம் ஆசிபெற்றவாறு,பிற சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்பட்டன.......
அவ்வகையில் மணமகனும் மணமகளும் மேருதனின் வீட்டில் இருந்து புறப்பட்டு,.......ருத்ரதேச அரண்மனையில் ஆரத்தியோடு வரவேற்கபட்டனர்,புகுந்தவீட்டு சம்பிரதாயங்கள் அங்கேதான் நிறைவேற்றப்பட்டன,பவானிபுரி செல்ல ஐந்து நாட்கள் ஆகிவிடும் அல்லவா?.......ஆகையால்தான் இந்த ஏற்பாடு