Episode 4

217 8 1
                                    

பவானிபுரி.......... ரம்மியமான இயற்கை எழில்சூழ் அழகிய பிரதேசம்🌷🌳, ஆதிசக்தியான பார்வதியை பவானி எனும் பெயரில் மக்கள் குலதெய்வமாய் வழிபடுவதால் இந்த பெயர் உண்டாயிற்று.

பவானிபுரி வீதியெங்கும் இன்று கொண்டாட்டம், பூக்களும், அழகிய வண்ணங்களும், கூடவே இசை நாதங்களும் ஒலிக்க பிரம்மாண்டமாய்  பிரகாசித்தது பவானிபுரி

அரண்மனை வீதியெங்கும் வண்ணக்கோலங்கள், வண்ணமலர் அலங்காரமும் பேரெழில்........... காரணம் இன்று பவானிபுரி இளவரசன் ருத்ர நந்தனுக்கு பிறந்தநாள்

மக்கள் அனைவரும் கடலாய் காத்திருக்க, ஐந்து வயது இளவரசன் ருத்ர நந்தனை, கைபிடித்து அழைத்துவந்துகொண்டிருந்தாள் செண்பக நயனா. அவளும் எட்டு வயது சிறுமியே..........

வலைபோன்ற சிறுதுணியால் தன்கண்களை அழகாய் மறைத்திருந்தாள், அவளை பார்த்து வீரர்கள் மயங்கிவிழுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு

பிஞ்சுக்கால்களால் கொஞ்சிய நடையோடு வந்த ருத்ர நந்தனை, அள்ளி எடுத்தாள் அவனது பாட்டியான அலமேலுவள்ளி

"இளவரசன் ருத்ர நந்தன்......வாழ்க

இளவரசன் ருத்ர நந்தன்........வாழ்க "

என்ற, மக்களின் வாழ்த்தொலி  விண்ணை பிளந்தது, பூமாரி பொழிந்தது

சேனாதிபதி வீரபத்ரன் முன்னே வந்து பேச தொடங்கினார் "நமது இளவரசர் ருத்ர நந்தனை வாழ்த்த வந்த பவானிபுரி மக்களுக்கு என் வணக்கங்கள்,நமது இளவரசரான ருத்ர நந்தனை, பெரும்வீரனாக உருவாக்கி, அரசனற்று இருக்கும் நமது பவானிபுரி அரியணையில் அரசனாக அமர வைப்பேன்.அதோடு, சதியால் வீழ்த்தப்பட்ட  நமது அரசர் பூபதி செழியன் மற்றும் முன்னாள் சேனாதிபதியான, எனது தமயன் விஜயபத்ரன், இருவரின் மரணத்திற்கும் காரணமான சதிகாரர்களை, அவன் ஒருநாள் நிச்சயம் பழிதீர்ப்பான், கூடவே அவன் தந்தையை போலவே நல்லாட்சி புரிந்து பவானிபுரி மக்களை காப்பான், இது சேனாதிபதி வீரபத்ரன் மக்களுக்கு தரும் வாக்கு....... ஜெய் பவானி "என்று உணர்ச்சிச்சிமிக்க தன் உரையை வீரபத்ரன் நிறைவு செய்தபோது,

ராமநயனம் Donde viven las historias. Descúbrelo ahora