மறுநாள் பொழுதில் தேநீர் குடித்தவாறு செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார் ராஜன்......தயங்கி தயங்கி நடந்தவாறு அவரருகே வந்து அமர்ந்தாள் சீதா.......
"அப்பா......"மெல்ல அழைத்தாள்
"ஏம்மா......"இயல்பாகவே கேட்டார் ராஜன்
"உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்....."சீதாவின் தயக்கம் அவள் முகத்தில் நன்றாக தெரிந்தது.....ராஜனும் அதை கவனித்தார்,ஆனால் காரணம் தான் அவருக்கு புரியவில்லை
செய்தித்தாளை வைத்துவிட்டு,அவள் பக்கம் திரும்பினார்......."என்ன விஷயம்னு சொல்லுமா......என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்...."அன்பாய் பேசினார்
"இல்லப்பா.....நீங்க மட்டும் வேலைக்கு போறீங்க....நம்ம குடும்பத்துக்காக உழைக்குறீங்க......அதான்,நானும் பார்ட் டைம் வேலைக்கு போலாம்னு நினைக்குறேன்......."ஒரு வழியாக கூறிவிட்டாள்
"என்ன பத்தி கவலபடாதம்மா.....எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல......நீ உன் படிப்ப மட்டும் பாரு....மத்தத நான் பாத்துக்குறேன்....."மென்மையாக கூறினார் ராஜன்
"அப்பா.....காலேஜ் டைம் போக,மத்த நேரத்துல நான் வீட்லதானே இருக்கேன்.....ப்ளீஸ்பா.....நான் போறேன்....."கொஞ்சியவாறே சீதா கெஞ்ச.....ராஜனின் மனமும் சற்று இளகியது....
"சொன்னா கேக்கமாட்டியே.....சரி....என்ன வேலைக்கு போக போற....."ராஜன் கேட்க....சீதாவின் முகத்தில் ஒரு வெளிச்சம்.....
"டியூசன் எடுக்க போறேன்பா....."உற்சாகமாக கூறினாள்
"டியூசனா.....நம்ம வீட்லயா.....அதெல்லாம் சரியா வராதும்மா...."ராஜனின் குரலிது
"நம்ம வீட்ல இல்லப்பா.....ஒரு பொண்ணுக்கு,அவ வீட்டுக்கு போய் பாடம் சொல்லிக்கொடுக்க ஆள் தேடுறாங்களாம்......அங்க போலாம்னு இருக்கேன்......"ஒரு சின்ன தயக்கம் சீதாவின் பேச்சில் எட்டிப்பார்த்தது......ராஜனும் சற்று தயங்கினார்.....
"தெரியாதவங்க வீட்டுக்கெல்லாம் எப்டிமா?....."ராஜன் கேட்டார்
"தெரியாதவங்க இல்லப்பா....நம்ம சந்துருவோட,கோச் பொண்ணுக்கு தான் சொல்லிக்கொடுக்க போறேன்......அவனுக்கு அவர நல்லா தெரியும்.......ஒரு பிரச்சனையும் இல்ல......"விடாமல் முயற்சித்தாள் சீதா