"ரகுபதியின் தாயும் தந்தையும் துறவறம் சென்ற பிறகு........... எக்காரணத்திற்காகவும் தன் மகள்களை அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து தர கூடாது என தீர்மானித்தார் மாமா மேருதன்.........அரச குடும்பத்தோடு அவருக்கு இருந்த அனைத்து உறவுகளையும் கைவிட்டார், அச்சமயம் மீராவும் சிறுபிள்ளை பவானியோ கைகுழந்தை........
அதுநாள் வரை ரகுபதியோடு ஆடி பாடி விளையாடி வந்தவர்களை, திடீரென அவனை சந்திக்கவும் கூடாது என தடை விதித்தால்........ சிறு குழந்தைகளால் எவ்வாறு அதை ஏற்றுக்கொள்ள முடியும்?....." என்று மாதவன் கூற
"ஆம் பெரியவர்களின் பிரச்சனையில் கள்ளம் கபடமற்ற பிஞ்சுகளின் உறவுகள் உடைந்து போய்விடுகிறது........ அது முற்றிலும் தவறான விஷயம்" என்று நயனா இடை கருத்திட்டாள்
"நீங்கள் கூறியது மிகவும் சரி....... ஆனால் மீரா இந்த தடைகளுக்கு உட்படவில்லை...... தன் தாயோடு அரண்மனைக்கு அருகில் உள்ள நதியில் நீர் எடுக்க வருவாளாம், அப்போது தன் வீட்டில் செய்த பலகாரங்களை ஒரு துணியில் கட்டி வைத்துக்கொண்டு, அரண்மனையில் உள்ள ரகுபதிக்கு கொடுப்பாளாம்...... ஆனால் இதற்கு மீராவின் தாய் தடைவிதிக்கவில்லை......
சிறு பிள்ளைகளின் மனதில் பகை எனும் நஞ்சை விதைக்கக் கூடாது என அவர் எண்ணியிருந்தார்,மீராவுக்கும் பவானிக்கும் எப்போது வேண்டுமானாலும் அரண்மனைக்குள் நுழைய அனுமதி உண்டு...... ஆகையால் காவலாளிகள் யாரும் அவர்களை தடுப்பதே இல்லை....
அந்த சமயத்தில் தான் நானும் ரகுபதியும் சந்தித்தோம், நட்பெனும் உறவு எங்களை இணைத்தது......... நானும் அரண்மனையில் வசிக்க தொடங்கினேன்....." எனும்போது பழைய நினைவுகள் மாதவனின் கண் முன் நிழலாட, அவன் முகம் லேசாய் வாடியது
"என்ன ஆயிற்று?..... ஏன் நிறுத்திவிட்டீர்கள்?..... அதன் பின் என்ன நடந்தது?...... உங்களுக்கும் மீராவுக்கும் எப்படி காதல் மலர்ந்தது?...." ஆர்வமாக கேள்வி கணைகளை தொடுத்தாள் நயனா
வாடிய முகத்தில், லேசான புன்னகையோடு சிறு வெட்கம் மாதவனுக்கு