"என் வாழ்நாள் முழுவதிலும் என் கடமையை செவ்வனே நான் ஆற்றி வந்துள்ளேன்.........என் கடமையுணர்வில் நீ என்ன பிழையை கண்டாய்......."கம்பீரமாய் குரலுயர்த்தினார் சந்திரதயா....அவர் ஒரு ரிஷியாகவே அவன் முன் நின்றிருந்தார்,ஒரு தந்தை என்ற உணர்வு அவரிடம் சிறிதும் தென்படவில்லை
ரகுபதியின் ஆத்திரம் அவனை பெரிதும் தூண்டியது.....ஆனால்,அவன் அதில் ஆட்படவில்லை,தன் கைகளை தானே இறுக்கி பிடித்து,அமைதிகாத்து தன் ஆத்திரத்தை வென்றான்....
ஒரு வழியாக பேசவும் தொடங்கினான்....
"தம் கடமையுணர்வு பற்றி விவாதிக்க நான் இங்கு வரவில்லை......ஒரு தந்தை எனும் ஸ்தானத்தில் இருந்து,இதுவரை நாம் எதுவும் எனக்கு செய்ததில்லை.......வேதனையை மட்டுமே பரிசாக வழங்கியுள்ளீர்கள்.........ஒரு தந்தையாக தாம் கடமை தவறியவர் ஆவீர்கள்....."உள்ளும் புறமும் வெதும்பிக்கொண்டிருந்தான் ரகுபதி
"எனில்,என்னை தேடி வந்ததன் காரணம் என்ன?....."சந்திரதயா கேட்டார்
"தங்கள் அன்பை நாடி நான் வரவில்லை.....யாரை நாடிச் செல்வது என்று அறியாத நிலையில்,சகாயம் ஒன்றை வேண்டியே இவ்விடம் வந்தேன்.....தம்மை காண....."தான் முழுதும் வெறுக்கும் ஒருவரிடம் உதவி வேண்டுவது,சற்று தயக்கமான செயல்தான் எனினும்....ரகுபதி நயனா மீது கொண்ட காதல் அனைத்தையும் கடந்தது......ஆகையால் தயக்கத்தை உடைத்து பேசிக்கொண்டிருந்தான்
தயாவும் சற்று தயை கொண்டார்......."நல்லது.....,நீ வேண்டி வந்த சகாயம் என்ன?....."...பரிவுடனேயே கேட்டார்
"என் வாழ்வின் ஒளியாய் இருந்தவர் என் தாய்,....தம்மால் அவரின் அரவணைப்பை நான் இழந்தேன்.....என் வாழ்வில் மீண்டும் ஒளியாய் நுழைந்தவள்....."ரகுபதியின் தொண்டைக்குழியை துக்கம் அடைத்தது
அதைக்கண்ட பின்பும் தயாவின் உள்ளம் தடுமாறவில்லை.......துறவறத்தின் முதல் படியே பந்தங்களில் இருந்து விடுபடுவதல்லவா.......
ரகுபதி தொடர்ந்தான்....."என் மனைவி செண்பக நயனா,......அவள் உருவம் என் கண்முன் இல்லை,என் உள்ளத்தில் அவளை தவிர வேறெதுவும் தென்படவில்லை......."