"என்னாச்சு டா.......ரொம்ப சந்தோஷமா இருக்க போல....."சந்துரு கேட்டான்
"என் நண்பன நெனச்சு,பெருமபடுறேன்.....அதனால வந்த சந்தோஷம்தான் இது....."மகிழ்ச்சி பெருக்கில் பேசினான் மோகித்
"என்ன நெனச்சா?....நான் என்ன பண்ணேன்....."சந்துரு கேட்க,....
"உன்ன சொல்லலடா......நான் என் ரகுபதிய சொன்னேன்....."மோகித் கூற....சந்துருவின் முகம் உண்மையில் வாடித்தான் போனது
"புரியும்படி சொல்லு......."சீதாவின் குரலிது.....மனதின் ஓரத்தில் ஏதோ சிறு எதிர்பார்ப்பும் இருந்தது
"என் ரகுபதி,உன்ன மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு,எல்லாரும் என்ன பேச்சு பேசுனீங்க?.....அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகல...."மோகித்தின் குரல் உயர்ந்திருந்தது
அதிர்ச்சியில் சீதாவும் சந்துருவும் ஒருவரையொருவர் பார்த்தனர்.....
"என்னடா சொல்ற?..."சந்துரு கேட்டான்
சீதாவின் மனதில் ஒரு ஆசுவாசம்.....கண்ணில் சிறுதுளி நீர்......."அப்போ நயனா?...."
மோகித் முகத்தில் சிறு புன்னகை......"என் பொண்ணு,இந்த ஜென்மத்துல அவன் பொண்ணு......ஆனால்,அவனோட வளர்ப்பு பொண்ணு........நாம இத அப்பவே யோசிச்சுருக்கணும்......அவன் நம்மளவிட ஒன்னு ரெண்டு வயசுதான் பெரியவனா இருப்பான்......அவனுக்கு,எப்டி பத்து வயசுல ஒரு பொண்ணு இருப்பான்னு நாம யோசிச்சுருக்கணும்......."
சீதாவின் மனதில் ரகுபதியை எண்ணி மகிழ்ந்து கொண்டாள்......ஒரு நிம்மதி பெருமூச்சு......
சீதாவின் ஆசுவாசம் கண்டு,சந்துருவுக்கும் மகிழ்ச்சியே......
"ரொம்ப நல்ல விஷயம்.......இப்ப அவரு எங்க இருக்காரு?...."சந்துரு கேட்டான்
"அதெல்லாம் நான் கண்டுபுடிச்சுட்டேன்......அதவிட முக்கியமான விஷயம் நிறைய இருக்கு......ராம் ஒரு ஆர்ச்சர்(வில்வித்தை வீரர்)......நேஷனல் லெவல்ல வின் பண்ணிருக்கான்.......இன்டெர்நேஷ்னல் லெவல்ல விளையாடுறதுக்கும் அவனுக்கு வாய்ப்பு கிடச்சுது......ஆனால் அவன் போகல.....ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி வச்சு,திறமையான அத்லெட்ஸ(விளையாட்டு வீரர்கள்) உருவாக்கிகிட்டு இருக்கான்.......அவனோட ஸ்போர்ட்ஸ் அகாடமி பெயர் என்ன தெரியுமா?....."மோகித் கேட்க.....சற்றே அவனை இருவரும் கவனித்தனர்