சில நாட்கள் கழிந்திருந்தது.....
"நான் நாளைக்கு கிளம்புறேன்.....காலேஜ் இருக்குல்ல...."மோகித்தின் குரல்....சற்றே சிந்தனையில் ஆழ்ந்தான் ராம்
"என்ன பெரிய காலேஜ்....எப்டியும் நீதான் ஃபஸ்ட்டு.....அப்புறம் என்ன?...மெல்ல போலாம்....."சந்துருவின் குரல்
"இல்ல சந்துரு....நாளைக்கு கிளம்புனா சரியா இருக்கும்.....நீயும் ரெடியா இரு.....நாம எல்லாருமே நாளைக்கு ஊருக்கு போறோம்......"ராம் கூற,அனைவரும் அவனை கவனித்தனர்....சீதாவும் தான்
"என்ன திடீர்னு?...."சந்துரு கேட்டான்
"சீதா காளி கோயிலுக்கு போணும்னு ஆசபட்றா......அது மட்டும் இல்லாம...."சற்றே இழுத்தவன்,மூதாட்டி கூறியதாய் சந்துரு கூறியவற்றை நினைத்துப்பார்த்தான்
"அது மட்டும் இல்லாம?...."சீதா கேட்டாள்
சற்றே சுதாரித்துக்கொண்டவன்....."அது மட்டும் இல்லாம,அவங்களுக்கு நாம ரொம்ப கடம பட்ருக்கோம்......அவங்கள போய் பாக்கணும்னு எனக்கும் தோணுது....."ராம் கூறினான்
சந்துருவின் மனதின் சஞ்சலம் மட்டும் அவனைவிட்டு போகவே இல்லை......
மறுநாள் உரிய நேரத்தில் விமானம் வானில் பறந்தது........ராமுக்கும் சந்துருவுக்கும் இடையே தனது இருக்கையில் நயனா கண்ணயர்ந்திருந்தாள்,ராமின் தோள்களில் சாய்ந்தவண்ணம்.....மற்றவர் கண்களில் உறக்கம் இல்லை........
மோகித்தும் சிந்தனையில் தான் ஆழ்ந்திருந்தான்,அவனுக்கருகே சுகுணாவும் கண்ணயர்ந்திருந்தாள்.....
ராமும் சீதாவும் உடன்,சந்துருவும் காரில் வந்து இறங்கினர்.....பரத்தின் வீட்டு முன்பு....மழையும் தூறலிட்டுக்கொண்டிருந்தது
மான்வி வெளியே வந்து அவர்களை வரவேற்ற வண்ணம் உள்ளே அழைத்துச் சென்றாள்
உள்ளே வந்து அமர்ந்தவர்கள்,சற்றே ஆசுவாசம் கொண்டனர்.....பயணகளைப்பு இருக்குமல்லவா
"சீதா....நீ போய் ரெஸ்ட் எடு.....நாளைக்கு காலைல கோயிலுக்கு போலாம்......"ராம் கூறினான்