அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை.....அவன்தான் கதையின் நாயகன் ஆயிற்றே......ராம் ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாக பரத் வந்து கூறினான்......அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.......சீதாவுக்கு உயிரே வந்தது போலும்❣️
இப்பொழுதுதான் சீதா சந்துருவைக்காண அவன் அறைக்கு சென்றாள்.....விபத்து நடந்த சமயம்,கூரிய பொருள் ஏதோ அவன்,வயிற்றை துழைத்துவிட்டது போலும்.....வயிற்றில்தான் கட்டு போடப்பட்டிருந்தது.....காலிலும் சிறு கட்டு இருந்தது.....
சீதா அருகில் சென்றபோதே அவன் விழித்துக் கொண்டான்.......
"இப்போ எப்டி இருக்க சந்துரு?....."சீதா கேட்டாள்
ராஜன் கூறிய அல்ப ஆயுள் தோஷத்தின்,வேதனையும்......சீதா வாகனத்தில் விழ முற்பட்ட கோபமும்....அவனுக்குள் இருந்தது....அவன் எதுவும் பேசவில்லை.....அவள் முகத்தையே அவன் பார்க்கவில்லை
"நான் ரெஸ்ட் எடுக்கணும்....இங்க இருந்து போய்டு......ப்ளீஸ்"சந்துரு கூறிய தொனி,சீதாவை காயப்படுத்தியது....சீதா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை......
ஆனால்,தன்னை பார்ப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை,என்று அவளுக்கு தோன்றியது......ஒருவித தயக்கத்தோடே அங்கிருந்து நகர்ந்தாள்......"உடம்ப பாத்துக்க......"
உதயாவோ நயனாவை அழைத்துக்கொண்டு வந்தாள்......
சீதாவை பார்த்ததும் ஓடி சென்று அணைத்துக்கொண்டாள் நயனா........."அப்பா எப்டி இருக்காரு?....."
நயனாவை தூக்கிக் கொண்டாள் சீதா...."அப்பா நல்லா இருக்காரு....இன்னைக்கு கண்டிப்பா கண்ண துறந்து பாப்பாரு,கவலையே படாத......"ஆறுதலாக பேசினாள் சீதா
அப்போது ராமின் அறையில் இருந்து வந்த செவிலித்தாய்,...."பேஷன்ட்க்கு நினைவு திரும்புது....நயனான்னு யார் பேரயோ சொல்றாரு......நயனா யாரு?....டாக்டர் கூட்டிட்டு வர சொன்னாரு"
"நான் தான் நயனா.....அவரு என்னோட அப்பா....."நயனா கூறினாள்
"அப்டியா?....சரி....அப்போ நீ போய் உங்க அப்பாகிட்ட மெல்ல பேச்சு குடும்மா......குழந்தைக்கு துணையா யாராச்சும் கூட வாங்க..."என்றவாறு செவிலித்தாய் நகர.....