சீதாவும் சற்று குழப்பத்தோடே சந்துருவை பார்த்தாள்
அவள் அருகில் வந்தான் சந்துரு "நீ என்ன நினைக்குற?" சீதாவிடம் மெல்ல கேட்டான்
" அந்த ராணியும் என்ன மாதிரி தான் போல" என்று கூறும்போது சீதாவின் முகத்தில் ஒரு கர்வம்
வாய்விட்டு சிரித்தான் சந்துரு
"அவ்ளோ பெருமையா எல்லாம் உன்ன நெனச்சுக்காத,……அந்த ராணி, வீரம், தைரியம் இதுக்கெல்லாம் பெயர் போனவங்க. ஆனா நீ பிளாக்போர்ட்ல இருந்த பல்லிய பாத்து செகண்ட் பெஞ்ச்ல இருந்து அழுதவ….……உன்ன எல்லாம் நயனாகூட கம்பேர் பண்ணாத" என்று கூறி மீண்டும் கிண்டலாய் சிரித்தான் சந்துரு
"அதுக்குள்ள செண்பக நயனா சுருங்கி நயனா ஆயிட்டாங்களா?"
"ஆமா, என்ன மாதிரியே அந்த ராணியும் ரொம்ப தைரிமானவங்களா இருக்காங்கல்லா, அதான் புடிச்சுடுச்சு " சிறு கர்வத்தோடு சட்டை காலரை உயர்த்தினான் சந்துரு
"ஓகோ….., அப்போ ஸ்ருதிய மறந்துட்டியா?"
சீதாவை, உயர்த்திய புருவத்தோடு லேசாய் முறைத்தான் சந்துரு
"அன்னைக்கு என்னடான்னா, ஸ்ருதி சிங்களா, கமிட்டடான்னு, நான் கேட்டதுக்கு….. ரெண்டு வாரமா முகத்த திருப்பிட்டுப்போன, இப்போ என்னடான்னா ஸ்ருதிய மறந்துட்டியான்னு கேக்குற?, என்ன நெனச்சுட்டு இருக்க?"சந்துரு கேட்டான்.
பதில் சொல்ல முடியாமல் முழித்தவள், சர சரவென தன் கைப்பையை திறந்து சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்தாள்
"இந்தா உன் சாப்பாடு "என்று அவன் கையை பிடித்து கொடுத்துவிட்டு அங்கிருந்து நழுவினாள்
சந்துருவிற்கும் உணவு எடுத்து வருவது சீதாவின் வழக்கம், அத்தனை அன்பான நண்பர்கள் இருவரும்
"எவ்ளோ சண்ட இருந்தாலும், மறக்காம எனக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கபாரு, நீ தான் என் தெய்வத்தாய் "என்று அவளை நோக்கி குரலை உயர்த்தினான் சந்துரு