சந்துருவின் கல்யாணத்துக்கு மாங்கல்யம் வாங்க,பெரும்கூட்டமே கடையில் இருந்தது.....அலங்காரம்,கல்யாண சேலையென,ஒவ்வொன்றின் பின்னும் மேளச்சத்தம் ஒலிப்பது போலவே இருந்து......தேடி தேடி காத்திருந்த அந்த நாளும் வந்தது.......
சந்துருவுக்கும் ஸ்ருதிக்கும் கல்யாணம்.........
கல்யாண பரபரப்போடு கலகலப்பும் சேர,மழலைகளின் கூச்சலோடு கல்யாண வீடே களைகட்டியிருந்தது.......
மோகித்தும் உதயாவும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்திருந்தார்கள்.....மோகித்தின் பணியும்,அவனது கடமையுணர்வும் அத்தகையது........
மணப்பெண் அலங்காரமும் மணமகன் அலங்காரமும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது......
சந்துருவோடு மோகித்தும் ராமும் பரத்தும் நின்றிருந்தனர்........வெள்ளை வேட்டியும் வண்ணச்சட்டையுமாக அவர்கள்,நிற்க்க.....மாப்பிள்ளை தோரணையில் சந்துரு இருந்தான்....
"உள்ள வரலாமா?...."சீதாவின் குரல்,...வண்ணப்பட்டுடுத்தி அவள் நிற்க்க,அதே தோரணையில் உதயாவும் அவளோடு வந்திருந்தாள்
"உள்ள வாங்க.....நான் எப்டி இருக்கேன்னு சொல்லு சீதா....."சந்துருவின் குரல்
அவன் தலையை சுற்றி திருஷ்டி சொடுக்கு கழித்தவள்......."சூப்பரா இருக்க......"என்றவாறே,அவள் அவனுக்காக வாங்கி வைத்திருந்த செயினை எடுத்தாள்
"இது உனக்காகத்தான்....."சீதா நீட்ட,மெல்ல அதன் டாலரை பிடித்து பார்த்தவன்,சற்றே சிந்தனைக்குள்ளானான்.....
"இது என்ன டிசைன்....நல்லாருக்கு....ஆனா,எங்கயோ பாத்த மாதிரி இருக்கு....."சந்துருவின் குரல்