பவானி ருத்ரனை கவனித்தாள்.....,கிணற்று நீரில் நனைந்ததால் உடலெங்கும் நீர் சொட்ட......அழுது சிவந்த கண்களில் கண்ணீர் வடிய.....முறைக்க கூட மனதில் தெம்பில்லாமல் அவளை நோக்கி நின்றான்.....அவனது விழிகளை பார்க்கும் போது,'என்னைவிட்டு செல்ல உனக்கு எப்படி மனம் வந்தது???....😓'என்று கேட்பது போல் இருந்தது....
ருத்ரனின் விழிகளுக்கு கூற,பவானியிடம் எந்த பதிலும் இல்லை....மீண்டும் கதறி அழத் தொடங்கினாள்......அனைவரும் அவளை ஆசுவாசபடுத்த முயற்சி செய்தனர்.....
அவளின் அருகில் வந்து அமர்ந்தான் ருத்ரன்......அவர்களுக்கு தடை சொல்ல யாரும் முன்வரவில்லை,மேருதனும் தான்......
பவானியின் கையை பிடிக்க நினைத்தவன்,மேருதன் இருப்பதால் சற்றே தயங்கினான்......இருப்பினும் மனதினில் பொங்கி வந்த வார்த்தைகளுக்கு அணைபோட அவனால் முடியவில்லை......
மெல்ல பேச தொடங்கினான் "பவானி....."ருத்ரன் அழைக்க,குற்ற உணர்ச்சியோடு தலைநிமிர்ந்து பார்க்க முடியாமல் தவித்தவள்,...ஒருவழியாக மெல்ல ருத்ரனை பார்த்தாள்......
சில நொடிகள் விழிகள் மட்டும் கதைத்தன........❤️
"ஏன் இவ்வாறு செய்தாய்?....என்மீது நீ கொண்ட நம்பிக்கை அவ்வளவு தானா?......,உன்னை நான் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை,நீ எனக்கு எந்த அளவு முக்கியம் என்பதை,....என்னால் வார்த்தைகளால் கூற முடியாது......கூறினாலும் உன்னால் புரிந்துகொள்ள முடியாது.....நீ இல்லை என்றால் நான் என்ன ஆவேன்,...என்று என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை......." ருத்ரனின் நா தழுதழுத்தது
"என்னை மன்னித்துவிடுங்கள்.....எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை....உங்களை தவிர்த்து இன்னொரு நபரை என் வாழ்வில்....என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை......என் தந்தையின் மனதையும் காயப்படுத்தும் துணிவு எனக்கில்லை...,நான் கொடும் தவிப்பில் வாழ்ந்து வந்தேன்.......இந்த இக்கட்டான சூழலில் இருந்து விடுபட வழி அறியாமல் தவித்து வந்தேன்......உயிரை விடுவது ஒன்றே சரியென தோன்றியது.....முதலில் அனைவரும் என்னை நினைத்து அழுவார்கள்....காலம் செல்ல செல்ல,அனைவரும் என்னை மறந்துவிடுவார்கள்......மீண்டும் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்று நினைத்தேன்.........."சிறு குழந்தைபோல் கதை சொன்னாள் பவானி😢