மறுநாள் பொழுது விடிந்ததும்,அனைவரும் கல்லூரிக்கு சென்றுவிட்டனர்.....காரணம், முக்கிய தேர்வு இருந்தது........ஆனால்,மாலை வேளை நெருங்கியதும்,போட்டி போட்டுக்கொண்டு நேத்ராவின்,பள்ளிக்கூட வாசலை அடைந்தனர்......
சந்துருவும் மோகித்தும் வேகவேகமாக பைக்கில் வந்து இறங்கினர்.......சீதாவும்,உதயாவும் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர்.....
"இவனுங்க எதுக்கு இங்க வந்துருக்காங்க?....."எரிச்சல் பட்டவாறு அவர்களை நோக்கி நகர்ந்தாள் உதயா,சீதாவும் அவளை தொடர்ந்தாள்
மோகித்தின் முன் சென்று நின்றவள் "நீங்க ரெண்டுபேரும் இங்க என்ன பண்றீங்க?....."உதயா முகம் கோபத்தில் சிவக்க.....
"அது....நான்.....நம்ம பொண்ண பாக்கத்தான் வந்தேன்..."மோகித்தின் நா தடுமாறியது
"உங்களுக்கு மறுபடியும் சொல்றேன்....அவ என் பொண்ணு.....உங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.....மரியாதையா,இங்க இருந்து போய்டுங்க........."விரலை உயர்த்தி எச்சரித்தாள் உதயா
"இவ்ளோ நாள் கழிச்சு,நம்ம பொண்ண பாக்குறேன்......அவ கிட்ட பேசனும்....அவள வாரி அணச்சு முத்தம் கொடுக்கனும்னு,ஒரு அப்பாவா...எனக்கு ஆச இருக்காதா?....ஏன் இப்படி நடந்துக்குற?....."கெஞ்சி நின்றான் மோகித்
"அண்ணைக்கு அவள,விட்டுட்டு காட்டுக்கு போனப்போ இந்த பாசம் எங்க போச்சு....."உதயா வாதம் செய்ய,அவளை தடுக்க முற்பட்டாள் சீதா
"உதயா....மோகித் பாவம்....அவன் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாரு......"
"எனக்கு யாரோட நிலமையும் தேவை இல்ல.......இப்பவே,இவரு இந்த இடத்தவிட்டு போகணும்...."உதயா பிடிவாதம் பிடித்தாள்,சந்துரு தன் பொறுமையை இழந்தான்.....
"ஏய் உதயா.....என்ன ரொம்ப பேசுற?....அவன் நேத்ராவ பாக்க கூடாதுன்னு சொல்ல நீ யாரு?...."சந்துருவின் குரல் உயர்ந்தது
"அவ என் பொண்ணு....நான் சொல்லத்தான் செய்வேன்...."முறைத்தவாறு அழுத்தி கூறினாள் உதயா
"அது போன ஜென்மத்துல.....இந்த ஜென்மத்து நீ யாருன்னு கூட,அவளுக்கு தெரியாது.......அப்படி இருக்கும்போது,அவள பாக்க கூடாதுன்னு நீ எப்டி சொல்லலாம்?......"சந்துருவும் வாதிட்டான்