Episode 48

76 4 0
                                    

வலியில் துடித்துக் கொண்டிருந்த நயனா......தன் துணிவு கொண்டு வலியை எதிர்கொண்டாள்....

"நயனா......."....குரல் கேட்டு,சற்றே நிம்மதி கொண்டாள் நயனா

"துர்கா என்னிடம் கேட்ட வரத்தை நிறைவேற்றும் பொருட்டு  வந்துள்ளேன்......உன் குழந்தையை என்னிடம் கொடு....."என்றவாறு தன் கைகளை அவள் நீட்டினாள்.....,தன்னில் காளியின் ஒளியை ஏற்றிருந்த துர்கா

ஏதும் புரியாமல் தவித்தாள் நயனா...."தாயே நீங்கள் என்ன கூறுகிறீர்கள்,என்பது எனக்கு விளங்கவில்லை.....என் குழந்தை கருவில் உதித்து,ஐந்து மாதங்களே ஆகின்றன......அப்படியிருக்க,எவ்வாறு என் குழந்தையை உங்களிடம் அளிக்க இயலும்.....தயை கூர்ந்து விளக்கமளியுங்கள்......."நயனா கூற,

"நான் அறிவேன் மகளே.....உன் குழந்தையை காக்க வேண்டும் என்பது உன் எண்ணம்.....ஆனால் உன்னை காக்க வேண்டும் என்பது தான் துர்கா வின் எண்ணம்......உனது குழந்தை ஐந்து மாத சிசுவாக,கருவில் இருப்பதால்.....அக்குழந்தையை காக்கும்படி வரம் வேண்டினால்,அவ்வரம் உன்னையும் காக்கும் என துர்கா எண்ணினாள்......ஆனால்,உன் ஆயுள் முடியும் நேரம் நெருங்கிவிட்டது,அதே சமயம்.....உன் குழந்தையை காக்க வேண்டும் என்று ,துர்கா வேண்டிய வரத்தை நான் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்......அதன் பொருட்டு தான் நான் அவ்வாறு கேட்டேன்......"தாய் கூற......

"ஆனால், அதை நான் எவ்வாறு செய்வேன் தாயே?........"தவிப்போடு கேட்டாள் நயனா.....அவள் நிலையை பார்க்கவே கொடுமையாக இருந்தது,அவள் கழுத்திலும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது

"அதை நீயே அறிவாய் மகளே.....ஆகையால்,மனதை சமாதானம் அடைய செய்து,உன் கருவறையை என்னிடம் ஒப்படைத்துவிடு....."என்று கூறும்போது,காளியின் இதயமும் கதறியது,......அவளும் தாயல்லவா

வலியும் சிரமமும் தன்னை வதைக்கும் நிலையில் கூட......தன் குழந்தைக்காக போராடிக்கொண்டிருந்தாள் நயனா.....ஏதும் புரியாத அச்சூழலில்,கண்மூடி தாய் பவானியை எண்ணிக்கொண்டாள்.....

ராமநயனம் Where stories live. Discover now