சற்றே சிரமபட்டவள் தலை நிமிர்ந்து வைஷ்ணவியின் தாயார் துர்காவை பார்த்தாள்......
"என்னவாயிற்று மகாராணி.......ருத்ர தேசத்தின் உத்தம ராணிக்கா இந்நிலை?...."பதறியவாறு கேட்டாள் துர்கா
நயனா வெகுவாக மூச்சுவாங்கினாள்.....கர்பவதியல்லவா?....
"இப்போது அது பற்றி பேச போதிய சமயம் இல்லை......அரசரும் சேனாதிபதியும் நாட்டில் இல்லா சமயத்தில்......துணிவற்ற பகைவர்கூட்டம்,பழிதீர்க்க வேண்டி படையெடுத்து வந்துள்ளது......என் மக்களை காக்க,நானே வாளேந்தி யுத்தகளம் புகுந்தேன்........பகைவரின் சதியால் எனக்கு இந்நிலை ஏற்பட்டது......என் உயிர் பற்றிய அச்சம் எனக்கில்லை....ஆனால்,என் வயிற்றில் உதித்துள்ள என்னவரின் அம்சத்தை எவ்வாறேனும் காக்க வேண்டும்.......என் கழுத்தில் பாய்ந்துள்ள அம்பினால்,என் உயிர் என்னைவிட்டு நீங்கிக் கொண்டிருக்கிறது........என் பிள்ளையோ கருவில் உதித்து ஐந்து திங்களே ஆகின்றது.......திக்கற்று நிற்கிறேன் நான்😖....."என்னும் போது,கண்ணில் கனலோடு கண்ணீருமாய் காளியை நோக்கினாள் நயனா
மீண்டும் தொடர்ந்தாள்....."வழியறியாது.....என் தாயை நாடி வந்துள்ளேன்......."என்றவாறே,வலியின் சிரமத்தால் கதறிளாள்....
என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தாள் துர்கா....நயனாவை மெல்ல அழைத்து வந்து,காளியின் பாதத்தில் சாய்ந்தபடி அமர வைத்தாள்
"நான் இப்போது என்செய்வேன்.....காளிக்கான நாற்பத்தியொரு நாள் நோன்பிற்காக,ஆலயத்தை சார்ந்த அனைவரும் ஊரின் எல்லை தாண்டி சென்றுள்ளனர்..........தாயே உலகம் போற்றும் உன் மகளுக்கு ஏன் இந்த நிலையை தந்தாய்?......."காளியை பார்த்து ஆதங்கப்பட்டாள் துர்கா
"கோபம் கொள்வதால் பயனில்லை தாயே.....எம்குழந்தையை காக்க ஏதேனும் மார்க்கம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இங்கு வந்தேன்......ஆனால்,இங்கு எனக்கு எந்த மார்க்கமும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.....இப்போது,நான் போர்க்களம் திரும்புவதே சரி என்று தோன்றுகிறது......."என்றவாறு மீண்டும் துடித்தாள் நயனா