Episode 6

153 7 1
                                    

ஆலயம் சென்ற அலமேலு அன்னையை பார்த்து, கண்ணீரோடு வணங்கி நின்றாள்

"தாயே பவானி, என்ன சோதனை இது, உன்னையே நம்பியிருந்த உன் பிள்ளைகள் இன்று சதிகாரர்களுக்கு அஞ்சி நாட்டைவிட்டு ஓடும் நிலை ஏற்பட்டது, இன்னும் நீ அமைதியாய் இருப்பது ஏன்?...... போரைக்கண்டு நாங்கள் அஞ்சவில்லை, ஆனால் ஆயத்தமாகும் சமயம் கூட இல்லாமல் நெருக்கடிநிலை ஏன் ஏற்பட்டது"அன்னையின் பாதத்தில் விழுந்து அழுதாள் அலமேலு

"ஆயத்தமாக இருப்பத்து நான்கு ஆண்டுகள் போதவில்லையா?...... உனக்கு "என்ற குரல் கேட்டு திரும்பினாள் அலமேலு

ஒரு மூலையில் வெற்றிலைமடித்து வாயில் போட்டவாறு அமந்திருந்தாள், குறிச்சொல்லும் மூதாட்டி, அந்த கோயிலிலேயே வாசம் செய்பவள் என்பதால் அனைவரும் அம்மூதாட்டியை அறிந்திருந்தனர்

"என்ன கூறுகிறீர்கள்?....."புரியாமல் கேட்டாள் அலமேலு

"வந்திருக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கையும், அதிலிருந்து இம்மண்ணை காப்பாதற்கான ஆற்றலும் என்றோ வழங்கப்பட்டுவிட்டது, அதை நீ மறந்துவிட்டு........ இங்கு வந்து யாரை பழிக்கிறாய் "உயர்த்திய புருவத்தோடு மூதாட்டியின் கண்களில் சிறுகோபம்

"நான் மறந்துவிட்டேனா?....."கேட்டவாறே ஞாபகபடுத்த முயற்சித்தாள் அலமேலு

"பவானிபுரியின் ராஜகுருவிடம் சென்று கேள், நீ மறந்ததை அவன் கூறுவான் "மூதாட்டியின் குரல் உயர்ந்தது

சற்றே யோசித்தாள் அலமேலு

"நீங்கள் கூறியது சரிதான், இருப்பத்துநான்கு ஆண்டுகளுக்கு முன்னர்,....... பவானிபுரிக்கு பேராபத்து வரப்போகிறது, அந்த தாய் பவானியின் அருளைத்தவிர, வேறு எவராலும் நாட்டை காக்க இயலாது.... என்று கணித்து கூறினார் ராஜகுரு,

என் மகன் பூபதிசெழியன் நாட்டை காக்கும்பொருட்டு, ராஜகுருவின் அறிவுரைக்கிணங்க தாயின் அருள்வேண்டி பெரும்யாகமும், செய்தான். ஆனால்....... ஏற்பட்ட ஆபத்திற்கு தீர்வு எங்கே உள்ளது?......"மீண்டும் புரியாமல் கேட்டாள் அலமேலு

ராமநயனம் Where stories live. Discover now