இப்போதெல்லாம் சீதாவின் கண்களை பார்த்து யாருமே மயங்குவது இல்லை......ஆனால்,அந்த நயங்களின் அழகில் எந்த மாற்றமும் இல்லை.......
காத்திருந்த அத்திருநாளும் கனிந்து வந்தது.....ஆம் இன்று சீதாவுக்கு கல்யாணம்..........
அலங்காரங்களும் மேளச்சத்தமும் மணப்பந்தலை இன்னும் அழகாக்கியிருந்தது.....
அனைவரின் முகத்திலும் ஆனந்தம்.......சந்துருவும் மோகித்தும் வேட்டியில் கச்சிதமாக பொருந்தியிருந்தனர்........உதயாவின் சேலையும் எடுப்பாக இருந்தது.......
ஆனால்,ஸ்ருதியை சேலையில் அவன் கண்டதில்லை போலும்......காற்றின் அசைவோடு அவள் வருகையில் சொக்கித்தான் போய்விட்டான் சந்துரு.......சற்றே அவனை இடித்துக்கொண்டு அவள் கடந்து செல்ல,நிகழ்காலம் திரும்பியவன்...தன் தலையை தட்டியவாறே மெல்ல தலைகுனிந்தான்😍........
சின்னதாவணியில் நயனா சிரித்து விளையாட,வயதிற்கேற்ற வேட்டியில் ரகு அவளோடு களிக்க......கோபத்தோடு மோகித் முறைக்க.....அது தனிக்கதை....ஒரு தந்தையின் கதை😂
இன்னும் ஒரு தாவணி அங்கு சுற்றித் திரிந்தது........சுலோச்சனா.......,அவளிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல்,காதலில் தவித்தது மேகனின் இதயம்.......அதை அறிந்தும் அறியாமல் நடிப்பதில் அவளுக்கு என்ன ஆனந்தம் என்று தான் தெரியவில்லை......
சபாபதியும் ராஜனும் ராமின் தந்தையோடு திருமண ஏற்ப்பாட்டில் ஆர்பரித்துக் கொண்டிருந்தனர்
அறிவழகனும் மனைவியோடு வந்திருந்தார்.......பாரத் மட்டும் கொஞ்சம் தாமதித்து விட்டான்......