"இன்னும் எவ்ளோ நேரன்டா கிளம்புவ,மணி ஆறாகுது......."சந்துரு கத்திக்கொண்டிருக்க........தலை சீவுவதில் மும்முரமாய் ஆழ்ந்திருந்தான் மோகித்
"நான் பேசுறது கேக்குதாடா உனக்கு?..."எரிச்சல்பட்டான் சந்துரு
"ஏன்டா கத்துற?.....எப்டியும் என் மாமனாரு உதயாவ பாக்கவிடமாட்டாரு......அவளையும் இப்ப எங்கயும் தனியா விட்றதுல்ல......அதுனால,வெளிலயும் அவள் மீட் பண்ண முடியாது.....செவுரேறி குதிச்சுதான் பாக்கணும்.....அதுக்கு எவ்ளோ நேரம் ஆனா என்ன?...."இயல்பாய் கூறினான் மோகித்
"செவுரு ஏறி குதிச்சு காம்பவுண்ட்குள்ள போலாம்........கதவ யாரு திறந்துவிடுவா?......."சந்துருவின் குரல்
"கதவ ஒடச்சு போக வேண்டியது தான்....."மோகித் கூறினான்
"ஆமா....நீ உடைக்குற வரைக்கும் ஹிட்லர் காதுல பஞ்சு வச்சுட்டு இருப்பாரு.....நீ எல்லாம் எப்புட்றா கலெக்டர் ஆன......."தலையில் அடித்துக் கொண்டான் சந்துரு
"ஆமால்ல....உதயா கைல ஃபோன் வேற இல்ல,இப்ப என்னடா பண்றது?...."மோகித் கேட்டான்
"ஆறு மணிக்கு ஸ்ருதிய உதயா வீட்டுக்கு போக சொல்லிருக்கேன்......அவ உதயாவ கூட்டிட்டு மொட்டமாடிக்கு வந்துடுவா......ஸ்ருதி ரொம்ப நேரம் அங்க இருக்க முடியாது,அதுக்குள்ள நாம அங்க போய்ட்டு,அந்த ஹிட்லர் கண்ல மாட்டாம வந்துடணும்......அதுக்கு தாண்டா சொல்றேன்......"சந்துரு எடுத்துரைக்க....
"அப்புறம் ஏன்டா வெயிட் பண்ற....கிளம்புடா....."என்று கத்தியவாறு வேகம் கொண்டான் மோகித்
அவ்வளவு தான்,இருவரும் பைக்கில் உதயாவின் தெருவை அடைந்தனர்.......
"வீட்டு முன்னாடி பைக்க நிறுத்துனா சரியா வராது......இங்கயே விட்டுட்டு போவோம்......"மோகித் கூறினான்
"ஆமா.....ஆமா....வா....."சந்துருவும் ஆமோதிக்க,இருவரும் உதயாவின் வீட்டு காம்பவுண்ட்டில் ஏறி உள்ளே குதித்தனர்
"இப்ப எப்டி மேல போறது....பைப் லைன்லாம் நம்ம வெய்ட்டு தாங்காது......"மோகித் கூறினான்