சீதா மயக்கத்திலிருந்து எழவேயில்லை,வேறு வசதிகள் ஏதும் இல்லாததால்....சீதாவை தூக்கி கொண்டு மலையிலிருந்து இறங்கினான் சந்துரு.......மற்ற மாணவர்களையும் அழைத்துக்கொண்டு துருவன் அவர்களோடு வேகமாக நடந்தான்.....
மலை என்பதால் சந்துருவும் தளர ஆரம்பித்தான்.........மோகித்தும் ஒருவித மயக்கத்தில் தான் நடந்து வந்துகொண்டிருந்தான்......
"டேய் மோகித்......நீ கொஞ்ச துரம் தூக்குடா........."சந்துரு கூற.....சற்றே கிறக்கத்திலிருந்து எழுந்தவன் போல.......
"ஆ....ம்.....தூக்குறேன்டா......கொடு..."என்றவாறு கையை நீட்ட,அவனிடம் சீதாவை கொடுத்தான் சந்துரு
அச்சமயம் மோகித்தின் கையிலிருந்து தவறி விழுந்த,அந்த நீலவண்ண மலரை கவனித்தான் சந்துரு....அந்த மலரை இதற்கு முன் அவன் எங்கும் கண்டதில்லை......அவசரகதியில் இருந்ததால்.....அதை பற்றி சிந்திக்காமல்.....சீதாவின் மீது கவனத்தை வைத்தான்......
ஒருவழியாக மலையடிவாரத்தை அடைந்தனர்......மற்ற மாணவர்களை,வந்த பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு,சீதாவை ஒரு வாடகை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்......உடன்,உதயாவும்....மோகித்தும்,சந்துருவும்.......துருவனும் சென்றனர்........
மருத்துவமனையை அடைந்தனர்....சீதா இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள்.....மறுநாள் பொழுதும் புலர்ந்தது......
குழந்தையை பற்றிய எண்ணமே சீதாவின் மனதில் படபடத்துக்கொண்டிருந்தது,'அம்மா...'........அக்குரல் அவள் மனசெவியில் ஒலிக்கவே....
"என் குழந்த......"என்று அலறியவாறே மயக்கத்திலிருந்து எழுந்தாள் சீதா...
சீதாவின் தந்தை ராஜனும்....சந்துருவும் உடன் இருந்தனர்.....சீதாவின் மயக்கம் வெகுநேரம் தொடர்ந்ததால்,மற்றோர் முன் தினமே வீடு திரும்பிவிட்டனர்.....
சீதாவின் சத்தம் கேட்டு பதட்டத்தோடே அவளருகில் சென்றனர் ராஜனும் சந்துருவும்.....
"என்னாச்சுமா......"ஒரு தந்தையின் தவித்த குரலிது....
"என் குழந்த....என் குழந்த எங்க...."தன்னிலை மறந்து கத்தினாள் சீதா