Episode 92

79 5 1
                                    

அன்று மாலையே ராமின் வீட்டு வாயிலை அடைந்தாள் சீதா........

"சீதா.....ஏன் அங்கயே நிக்குற?.....உள்ள வா....."தாத்தாவின் குரல் கேட்டு உள்ளே வந்தாள்

"தீடீர்னு வந்துருக்க?....பிரச்சன ஒன்னும் இல்லையே?....."தாத்தா கேட்டார்

"இல்ல தாத்தா,அப்டிலாம் எதுவும் இல்ல....நயனாவ பாக்க தான் வந்தேன்.....வீட்ல வேற யாரும் இல்லையா தாத்தா?.... "வினவி நின்றாள்

"அஞ்சி இங்கதான் எங்கயாவது இருப்பான்......நயனா ஸ்கூல்ல இருந்து இன்னும் வரல.....ராம் அவள கூட்டிட்டு வரதான் போய்ருக்கான்........வள்ளி அவ ஃப்ரெண்டு வீட்டுக்கு போனா,இன்னும் வரல......எனக்கு டீ போட்டு கொடுக்கத்தான் யாரும் இல்ல....."தாத்தாவின் குரலில் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது.....அது சீதாவுக்கு புரிந்தது....

"நான் போட்டு குடுக்குறேன் தாத்தா....."சீதாவின் குரல் கேட்டு,தாத்தாவின் முகத்தில் புன்னகை

"ரொம்ப சந்தோஷம்.....நீ டீ போடு.....நான் போய்,வள்ளிய கூட்டிட்டு வர்றேன்.....இல்லன்னா,உன் பாட்டியும் அவ ஃப்ரெண்ட்சும்  கூடி பேசி,ஊரையே ரெண்டாக்கிடுவாங்க......"தாத்தா கூற...

"சரி தாத்தா....."புன்னகைத்தவாறே கூறினாள் சீதா

"அப்புறம் சீதா,.....நயனாவும் இப்போ வந்துடுவா,அவ ஈவ்னிங்ல டீ குடிக்கமாட்டா......ஆப்பிள் ஜூஸ் தான்......முடிஞ்சா போட்டு வை....இல்லன்னா,பாட்டி வந்து பாத்துப்பா......"தாத்தா கூற,....புன்முறுவலோடே தலையசைத்தாள் சீதா.....

தாத்தாவும் நகர......சமையலறைக்குள் சென்ற சீதா.....ஒரு பக்கம் தாத்தாவுக்கு டீ,மறுபக்கம் நயனாவுக்கு ஜூஸ் என,வேகம் கொண்டாள்.......வேலையை நிறைவு செய்யவும் காரின் ஹார்ன் சத்தம் கேட்டது......

வாயிற் கதவோரம் வந்து நின்றாள்......

பள்ளிச் சீருடையில் உணவுப்பையை தூக்கிக்கொண்டு,படித்த களைப்பில் தலையை தொங்கபோட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தாள் நயனா........

சற்றே தலை நிமிர்ந்து பார்த்தவள்,வாசலில் வரவேற்க்க காத்திருந்த சீதாவை பார்த்தாள்.......முகமெல்லாம் மலர்ச்சி.....

ராமநயனம் Where stories live. Discover now