Episode 13

118 8 2
                                    

ருத்ர தேசமே ஒரு நந்தவனம்,எனில் ருத்ர தேசத்தின் நந்தவனம்?.....சொல்லவா வேண்டும்.....அத்தனை எழில்🌹💚..........

நயனா முதல் அடி எடுத்து வைத்தபோதே,பூக்களின் நறுமணம் அவளை வரவேற்றது,அடி மேல் அடி வைத்து நடக்க....மனமெல்லாம் ஒருவித உற்சாகம்....அடித்து ஓய்ந்த மழையின் தூறல்கள் இலைகளிலும்,மலர்களின் இதழ்களிலும்💧....

எங்கும் பல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கியது🌹🌺🌼வண்ணமயமான வண்ணத்து பூச்சிகளின் அரவணைப்பில்.....

கூடவே வண்ண மயில்களும்,...இலைகளா?...கிளிகளா?...என‌ வியக்கும் வண்ணம் கிளிக்கூட்டங்களும்,கொஞ்சும் புறாக்களும் அங்கு வாசம் செய்தன

சிட்டு குருவிகளின் சலசலப்போடு,இரட்டைவால் குருவிகளின் ஜோடி கூட்டங்களும் எழில் கூட்ட.....அழகிய அணில்கள் கொய்யா மரங்களில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன,அதற்கு கீழே புதர்களில் முயல்கள்🐰🐰....

முழுக்க முழுக்க இயற்கையே அலங்காரமாய் இருந்தது💚...

இயற்கையின் வனப்பில் தன்னை மறந்து நடந்துகொண்டிருந்த நயனாவின் பார்வை அந்த அழகிய குளத்தின் பக்கம் திரும்பியது,🌷செந்தாமரை மலர்களோடு,சிவப்பு வெள்ளை அல்லி மலர்களும் சிங்காரமாய் மலர்ந்திருந்தது.....அவற்றிற்கு அருகில் சென்ற நயனா,வண்ண மீன்கூட்டங்களை ரசிக்க துவங்கிவிட்டாள்🐠....

கரையோரம் நின்ற அன்னப்பறவை களை கண்டவள்....அவற்றை நோக்கி நடந்தாள்,.....ஈரமான பூமியை பார்த்தவள்,தன் காலணியை கழற்றிவிட்டு....வெறுங்காலோடு மண்மீது மெல்ல அடிவைத்து நடக்கலானாள்🤗.....

தன்பாதம் வழியாக பூமித்தாயின் அன்பை அரவணைத்தாள்....இனம்புரியாத ஆனந்தத்தில் அவள் கண்கள் குளமானது,கூடவே மழைக் குளிருக்கு இதமளித்த சூரிய கதிர்கள்,தென்றலோடு அவளை தீண்டியது......

இயற்கையே பேரழகு🌹💚...

இயற்கையே மகிழ்ச்சி 🌹💚...

இயற்கையே நிம்மதி🌹💚...,நயனாவின் இதயத்தின் குரலிது

திடீரென மணியோசை ஒன்று கேட்க,அத்திசையில் திரும்பினாள்

ராமநயனம் Where stories live. Discover now