Episode 53

81 5 1
                                    

அன்றிரவு சீதாவின் வீட்டில் அனைவரும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்........சிந்தனையில் தூக்கத்தை மறந்திருந்த சீதாவின் கண்கள்,அப்போது தான் சற்று துயில் கொள்ள தொடங்கியது😴......

கனவிலும்.... நயனா என்று அழைக்கும் குரலும்,வாள் வீச்சின் சத்தமும்...பல முகங்களின் நிழல்களும்.....காளியின்  வானுயர்ந்த சிலையும் மின்னல்போல் வந்து சென்றது.....அதன் வழியே,

'ஆராயிரம் பௌர்ணமிகளுக்குள் உன் கணவன் வந்து உன் குழந்தையை பெற்றுக்கொள்ளவில்லை எனில்,உன் குழந்தை  எங்கிருந்து வந்ததோ,அந்த இடத்தையே சென்றடைந்து விடும்......',என்ற குரலும் கேட்டது....

அதனுடனே,ஜீவ சிற்பத்திலிருந்து 'அம்மா...'என்று அழைக்கும் குழந்தையின் சத்தம் கேட்கவே....சடாரென விழித்துக் கொண்டாள்......சீதா

அவள் முகமெல்லாம் வியர்த்து போய் இருந்தது.......குழந்தையை எண்ணியவளின்,விழிகளில் நீர் பெருக்கெடுத்தது,பதட்டமும் அதிகரித்தது.....அருகே உறங்கிக்கொண்டிருந்த ஸ்ருதி விழித்திடா வண்ணம்,மெல்ல எழுந்து,அறையைவிட்டு வெளியே வந்தாள்......அப்படியே காளி ஆலயத்தை நோக்கி ஓட்டம் பிடிக்க முற்பட்டபோது....யாரோ அவளது கையை பிடித்தனர்......

அது ராஜன்..........

"இந்த நேரத்துல எங்க போறம்மா?...."சற்றே பதட்டத்தோடு கேட்டார் ராஜன்

"அப்பா....என் குழந்த அங்க எனக்காக காத்துட்டு இருக்குப்பா.....நான் போய் என் குழந்தைய,கூட்டிட்டு வர்றேன்பா......என்ன விடுங்கப்பா..."என்றவாறு.... கண்ணீரோடு,ராஜனின் பிடியிலிருந்து  தன் கையைவிடுவிக்க முயன்றவாறு கெஞ்சினாள் சீதா.....

"என்னம்மா பேசுற நீ....ஏன் இப்டிலாம் பேசுற...."என்று ராஜன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,சுகுணாவும் ஸ்ருதியும் சத்தம் கேட்டு வந்தனர்....

"ஆமப்பா.....காளி கோயில்லதான் என் குழந்த இருக்கு.....நான் போய் கூட்டிட்டு வர்றேன்பா......என்ன விடுங்கப்பா....."சீதா கூற,அனைவரது மனமும் பதைபதைக்க தொடங்கியது😟

ராமநயனம் Where stories live. Discover now