மீராவும் மெல்ல தலையசைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.......மாதவனும் அங்கிருந்து நகர்ந்தான்....
ரகுபதியும் முயற்சியை விடுவதாய் இல்லை.....நட்பு தேசங்களுக்கும் தன் விருப்பத்தை தெரியப்படுத்தினான்....இருந்தும் பயனில்லை.....இவ்விதம் நாட்களும் நகர்ந்தன
ஒரு நாள்...ஈசன் முன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான் ரகுபதி.......
"ரகுபதி.....பவானிபுரியில் இருந்து ஓலை வந்துள்ளது....."மாதவன் குரல்கேட்டு மெல்ல கண்விழித்தான்
"செய்தி என்ன?....அனைவரும் நலம்தானே?...."ரகுபதி கேட்டான்
"அனைவரும் நலமாக இருக்கிறார்கள்....அதோடு...."சற்றே தாமதித்தான் மாதவன்
மெல்ல எழும்பி அவனருகே வந்தான் ரகுபதி....."தயக்கம் ஏன்?...உள்ள செய்தி என்ன?...."
"பவானிபுரியின் அரசரும்,பவானியும் விரைவில் ருத்ர தேசத்திற்கு வருகைதர உள்ளார்கள்....."மாதவன் கூறினான்
ரகுபதியின் முகத்தில் சிறு வாட்டம்...."இது நற்செய்தியல்லவா?....நயனாவின் பிரிவிற்கு பிறகு,ருத்ரன் என்னை முற்றிலும் தவிர்த்து விட்டான்.....நான் அவனுக்கு வாக்களித்திருந்தேன்,நயனாவை என் உயிரினும் மேலென கருதி பாதுகாப்பேன் என்று.....ஆனால்...."வார்த்தை முட்டியது.....சற்றே தாமதித்து,மீண்டும் பேசினான்
"எனினும்,இப்போது அவன் வருகை தருவது,எனக்கு மகிழ்ச்சியையே வழங்குகிறது.....ஆனால்,உன் முகம் ஏன் வாட்டம் கொண்டுள்ளது?...."குழப்பத்தோடே கேட்டான் ரகுபதி
"ருத்ரனின் இந்த தீடீர் வருகைக்கு காரணம் என்னவாக இருக்கும்,என எண்ணி என் மனம் கலக்கம் கொண்டுள்ளது....."மாதவன் கூறினான்
"காரணம் என்னவாக இருந்தாலும்....அவன்,பவானிபுரியின் அரசன்...ருத்ர தேசத்தின் மருமகன்.....ஆகையால் அவனை சிறப்புற கவனிக்க வேண்டியது நமது கடமை....அதோடு,அவன் இப்போது தந்தையாகியிருக்கிறான்.....பிறந்துள்ள குழந்தைகளுக்கும் ருத்ரதேசத்தோடு பந்தம் உள்ளதல்லவா?....அவர்களையும் சிறப்புற வரவேற்க வேண்டும்..."எனும்போது,ரகுபதியின் முகத்தில் சிறு புன்னகை....மழலையை எண்ணி......