ஸ்ருதியின் அருகில் அமர்ந்தான் சந்துரு.....அவ்வளவு தான்.....அவனருகில் வந்து நின்றான் ருத்ரன்......பரத்தின் மகன்.....
சந்துருவின் மடியில் ஏறி அமரவே முற்பட்டான்......
"இப்போ தான் ஒரு குரங்க துரத்திவிட்டேன்.....அதுக்குள்ள அடுத்தது வந்துடுச்சு பாரு....."என்று சலித்தவாறே அவனை மடியில் அமர்த்திக் கொண்டான்......
"குழந்தைங்க கடவுளோட மறு உருவம்....அவங்களோட அன்பு தான் அந்த கடவுளோட ஆசிர்வாதம்......அத வேண்டான்னு சொல்லக்கூடாது....."ஸ்ருதி கூறினாள்
"இவனுக்கு எதுக்கு என் மேல அன்பு.....அதான் தெரியல......"சந்துரு கூறினான்....எதையோ பார்த்த ருத்ரன் இறங்கி ஓடினான்....குழந்தையல்லவா?....
"கடவுள் இறங்கி ஓடுறாரு பாரு....."சந்துருவின் குரல்
நாற்காலியில் சாய்ந்தவாறு.....மோகித்தையும் உதயாவையும் பார்த்துக்கொண்டிருந்தான் ராம்.....மணக்கோலத்தில் நின்றிருந்த உதயாவை பார்த்தபோது,தன் தாயின் நினைவு வெகுவாக அவனுக்குள் பெருக்கெடுத்தது......அச்சு அசலாக கோமதி அம்மாளின் உருவத்தை பெற்றவள் உதயா.......அவள் முகத்தில் தன் தாயின் எண்ணங்களில் உருகியிருந்தான் ராம்
"இந்த அம்மாவ கண்டுபுடிச்ச உன்னால,உன் சொந்த அம்மாவ கண்டுபிடிக்க முடியலையே......"என்று மூதாட்டி கூறிய வார்த்தை அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.......
அவன் இதயம் லேசாய் தவிக்க.....உதயாவின் பின் இருந்து முகம் காட்டினாள் நயனா....அவளோ,உதயாவின் ஜாடையை ஒத்தவள்........ராமை பார்த்து...
"ராமா......"என்று அவள் அழைக்க....சற்றே அதிர்ந்தான் ராம்,கோமதி அம்மாளும் ரகுபதியை அவ்வாறு தான் அழைப்பாள்......
அவன் உறைந்து போய் நோக்க.......அவனருகே தாவணி சிறகாய் ஓடி வந்தாள் நயனா....
"அப்பா.....வாங்க கேக் கட் பண்ணுவோம்......"ராமின் கையை பிடித்து இழுக்க....அது ஏதும் காதில் விழாதவனாய்,....அவளையே நோக்கியிருந்தான் ராம்.....சில வினாடிகள் இப்படியே நகர....