"நயனா இறந்துட்டா........நயனா இறந்துட்டா..........."என்று சொல்லும்போது துருவனின் குரல் முட்டி நின்றது,அவனால் பேச முடியவில்லை......அவன் விழிகளிலும் நீர் நிறைந்திருந்தது........
கதை கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் மனமும் வேதனை கொண்டிருந்தது........
கதைக்குள் உறைந்திருந்த சந்துரு சட்டென துடித்தவாறு தன்னிலை உணர்ந்தான்......அவனது விழிகளிலும் நீர் பெருக்கெடுத்திருந்தது......சட சடவென அதை துடைத்துக்கொண்டான்.........
'என்னடா இது.....என் கண்லயே தண்ணி வர வச்சுட்டாங்க....'என்று நினைத்தவன், எதேச்சையாக மோகித்தை பார்த்தான்.....சற்றே குழப்பமுற்றான்......அவன் கண்களில் கனலாக முறைத்தவாறு நின்றிருந்தான்......அவனது பார்வை யாரை நோக்கியிருக்கிறது என்று கவனித்தபோது மேலும் குழப்பமுற்றான் சந்துரு......அவனது கனலான பார்வை சீதாவை நோக்கியிருந்தது.......அவளது கண்களிலும் நீர் வடிந்து கொண்டிருந்தது..........
"இதெல்லாம் நடந்துருக்கவே கூடாது......."என்று கூறியவாறே,கண்களில் நீர் பெருக சீதாவின் தோள்களில் சாய்ந்தாள் உதயா.......ஆறுதலாய் அவள் கன்னத்தை பற்றியவாறு,தன்னை மறந்து தலையசைத்தாள் சீதா......நடந்த சம்பவங்கள் நினைவில்லை என்றாலும்.....நினைகளின் சாரல் அவளை தீண்டியது..........
"டேய் மோகித்.....டேய்......"தன்னை மறந்து ,முறைத்து நின்ற மோகித்தை தட்டி எழுப்பினான் சந்துரு....கனவில் இருந்து வழித்தவன் போல,சட்டென நிகழ்காலம் உணர்ந்தான் மோகித்
"என்னாச்சுடா.....ஏன் சீதாவ முறைக்குற?....."சந்துரு கேட்டான்
"நானா?...எப்போ?...."குழப்பத்தோடு கேட்டான் மோகித்
"எல்லாரும் ரகுபதி நயனா கதையில முங்கிட்டீங்க போல.........."என்று கிண்டலாக கேட்டவாறே,பேராசிரியர் துருவனை பார்த்தான் சந்துரு
"சார்......சுவரோவியம் இதோட முடியுது.....இதுக்கப்புறம் என்னாச்சுன்னு சொல்லுங்க.....இல்லன்னா,இந்த சின்ன பசங்களால தாங்க முடியாது......"அவனது ஆர்வத்தை மறைக்க முற்பட்டவாறு......கூறினான் சந்துரு