துவக்கமாக பெண் பார்க்கும் படலம் பவானியின் இல்லத்தில் நன்முறையில் நடந்தேறியது.....தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் அனைத்தும் ருத்ரதேச அரண்மனையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.......அன்றிரவு உணவுக்கு பின் அரண்மனை வாசிகள் அனைவரும் கூடி கதைத்துக் கொண்டிருந்தனர்.......
"ருத்ரனின் திருமணமும் நடந்தேறிவிட்டால்....என் மனம் நிம்மதி கொள்ளும்...."அலமேலு கூறினாள்
"உண்மை தான்....பிள்ளைகளின் திருமணமே பெற்றோருக்கு பெரும் நிம்மதியை வழங்கும்.....தாய் பவானியின் அருளால் என் மகன் நீலனுக்கும்,கூடியவிரைவில் திருமணம் நடந்துவிட்டால்,என் மனமும் நிம்மதி கொள்ளும்...."நிகேதனின் குரலிது
அதை கேட்டவுடன் நயனாவை பார்த்தான் ரகுபதி......நயனாவும் மெல்ல தலையசைக்க.....பேச தொடங்கினான்...."எங்களிடம் நல்ல பெண் ஒருத்தி இருக்கிறாள்......அவளை மருமகளாக பெற,நீங்கள் பாக்கியம் செய்தவராயின் மேற்கொண்டு பேசலாம்...."..ரகுபதியின் குரல் கேட்டு அனைவரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது
"உண்மையாகவா?.....யாரந்த பெண்?....."நிகேதன் கேட்டார்
"அது வேறு யாரும் அல்ல,இங்கு நிற்கும் வைஷ்ணவிதான்......நல்ல குணவதி,இவளை மனைவியாக அடைய இருப்பவன் பெரும் பாக்கியசாலி......."ரகுபதி கூற,மெல்ல வைஷ்ணவியை பார்த்தான் நீலன்.....நிகேதனும் வைஷ்ணவியை பார்க்க தலைகுனிந்து நின்றாள் வைஷ்ணவி
நிகேதனின் மனம் நிறைந்து விட்டது,அப்படியே நீலனை பார்த்தார்,அவன் முகத்தில் தெரிந்த பிரகாசம் அவன் மன எண்ணத்தை அவருக்கு உணர்த்தியது......"நல்லது...எனக்கு இதில் பூரண சம்மதம்.....இருப்பினும் வைஷ்ணவியின் பெற்றோரிடம் இது பற்றி பேசுவது தானே முறை....."நிகேதன் கேட்டார்
"நீங்கள் கூறுவது சரி தான்....இது பற்றி ஏற்கனவே வைஷ்ணவியின் பெற்றோருக்கு செய்தி அனுப்பியிருந்தோம்......நாங்கள் எடுக்கும் முடிவில் அவர்களுக்கு,நம்பிக்கை உள்ளது,ஆகையால் அது பற்றிய கவலை தேவையில்லை.......ஆனால் உங்களிடம் ஒன்று கூற வேண்டும்....."ரகுபதி கூற.....