Episode 58

80 5 3
                                    

இரண்டு நாட்கள் கழிந்திருக்கும்.....சந்துருவை கல்லுரிக்குள் தேடிக் கொண்டிருந்தார் துருவன்.....கல்லூரியின் அந்த கொன்றைமர நிழலில் மோகித்தோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் சந்துரு.....அதை பார்த்த துருவன் அவர்களுக்கருகே சென்றார்.....

துருவனை கண்டதும் மரியாதையாக எழுந்து...."குட் மார்னிங் சார்...."என்றான் சந்துரு...பதிலுக்கு துருவனும்,"மார்னிங்...சந்துரு...."என்றார்

ஆனால் மோகித்தோ,துருவனை கனலாய் முறைத்தவாறு....அப்படியே அமர்ந்திருந்தான்.....துருவன் சற்றே வித்தியாசமாய் உணர்ந்தார்.....

"டேய் மோகித்....சார் வந்துருக்காரு..... அப்டியே உக்காந்துருக்க??!...எழும்புடா...."என்று,மோகித்தின் கையை பிடித்து இழுத்து எழுப்பிவிட்டான் சந்துரு....வேண்டா வெறுப்பாய் எழுந்து நின்றான் மோகித்

"இல்ல சார் மோகித் கொஞ்சம் அப்சட்டா இருக்கான்...அதான் இப்டி......"சமாளிக்க முற்பட்டான் சந்துரு

"இல்ல...பரவால்ல....நான் உன்ன பாக்கதான் வந்தேன்....."துருவன் கூறினார்

"என்னையா?....எதுக்கு சார்..."சந்துரு கேட்டான்

"உன் ஃப்ரெண்டு நயனா,இப்போ எப்டி இருக்கா???"இயல்பாய் கேட்டார் துருவன்

முறைத்தவாறே மீண்டும் அவரை முகத்தை பார்த்தான் மோகித்...

"அவ இப்போ நல்லாதான் சார் இருக்கா🙂.....ஒரு நிமிஷம் இருங்க,நீங்க இப்போ நயனான்னா சொன்னீங்க🧐?......"குழப்பத்தோடே  கேட்டான் ச்நதுரு

சட்டென வாயடைத்த துருவன்,மெல்ல பேசினார்...."அது....நான் ரகுபதி நயனா பத்தி யோசிச்சிட்டு இருந்தனா....அதான் வாய் தவறி...சீதாவுக்கு பதிலா,நயனான்னு சொல்லிட்டேன்....."

"அது சரி....ஒருதடவ கத கேட்டதுக்கே,எங்க நிலம எப்டியோ இருக்கு....நீங்க அதுல ஆராய்ச்சி பண்றவரு....பரவால்ல இருக்கட்டும்...."நக்கலாய் பேசினான் சந்துரு

"சரி...சீதா மறுபடியும் எப்போ காலேஜுக்கு வர்றா????"மீண்டும் துருவனின் குரலிது

ராமநயனம் Where stories live. Discover now