"என் குழந்தைய மீட்குற வரைக்கும்,எனக்கு நிம்மதிங்குறதே கிடையாது......"சீதா கூற....
"இப்படி சும்மா இருந்து பேசிட்டு இருந்தா....வேலைக்கே ஆகாது.....பேசாம,ராம கடத்தி,கழுத்துல கத்தி வச்சு,சீதா கழுத்துல தாலி கட்ட வைப்போம்......குழந்தைய மீட்போம்.....அப்புறம் வர்றத,அப்புறம் பாத்துக்கலாம்....."சந்துரு கூறி முடித்தான்
"சினிமால வர்ற மாதிரி கடத்துறதெல்லாம் அவ்ளோ ஈசி இல்ல.....சும்மா பேசாம,செஞ்சு முடிச்சுட்டு பேசு.....கண்ட சினிமாவையும் பாத்துட்டு இங்க வந்து உளற வேண்டியது"உதயா சலித்துக்கொள்ள,சற்றே கடுப்பானான் சந்துரு
"நான் நெனச்சா,கண்டிப்பா செய்வேன்.....மோகித்தோட அப்பா மினிஸ்டர்.....தெரியும்ல?....அந்த இன்ஃபுளுவன்ஸ வச்சே எஸ்கேப் ஆயிடலாம்....."சந்துரு கூற....லேசாய் முறைத்தான் மோகித்...
"என்ன பேசுற சந்துரு நீ.....ஏற்க்கனவே,அவருக்கு என்ன பாத்தா புடிக்கமாட்டேங்குது.....இதுல,நீ சொன்ன மாதிரி செஞ்சா,காலம் பூரா அவரு வெறுப்ப நான் சகிக்கணும்......என்னால அத தாங்கிக்கவே முடியாது......அது மட்டும் இல்லாம,கழுத்துல கத்தி வச்சா,அவரு எனக்கு தாலி கட்டுவாருன்னு என்ன நிச்சயம்.....கொஞ்சம் ப்ராக்டிகலா பேசு சந்துரு......."சீதா பேசினாள்
"அதுக்கெல்லாம் முதல்ல,நயனாவோட தாலி வேணும்.....அது எங்க இருக்குன்னே தெரியல.....முதல்ல அது கிடைக்கட்டும்.....அதுவர,அகிம்சை வழியிலயே போவோம்.....கடைசிவர ராம் நம்ம வழிக்கு வரலன்னா,தாலி கிடைச்ச உடனே,சந்துரு சொன்னமாதிரி தான் செய்யணும்......"மோகித் கூற,....அவன் கூற்றில் விருப்பமில்லாதவளாய் அவனை பார்த்தாள் சீதா
"வேற வழி இல்ல சீதா....புரிஞ்சுக்கோ..."மோகித் கூற,கூறுவதற்க்கு பதிலின்றி தலைகுனிந்தாள் சீதா...
நாட்களும் அவ்விதமே நடைபோட்டது.....
அன்றும் வழக்கம்போல் சீதா ராம் வீட்டிற்க்கு சென்றிருந்தாள்......
தாத்தா செய்தித்தாள் வாசிக்க,பாட்டி கீரை உதிர்த்தவாறு அருகில் அமர்ந்திருந்தாள்.......