பொழுதும் மெல்ல புலர்ந்தது......🌄,ருத்ரனை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன.....ஆரத்தி தட்டோடு நயனா நின்றிருக்க ,உடன் ரகுபதியும் மாதவனோடு மீராவும் கூடவே வைஷ்ணவியும் நின்றிருந்தாள்......வருவது பவானிபுரியின் அரசனல்லவா.....
படைகளோடு அரண்மனை வாயிலுக்குள் நுழைந்த ருத்ரன்,குதிரையிலிருந்து இறங்கி நடந்து வந்தான்.....உடன் நீலனும் வந்தான்......நயனாவை பார்த்த ருத்ரனின் கண்களில் நீர் நிரம்பியிருந்தது......நயனாவின் விழிகளிலும் தான்,...பல நாட்கள் பிரிவால் வந்த ஏக்கம்💜😍.....
நயனாவை கண்டு நீர் நிரம்பிய அந்த விழிகள்,.....சுற்றும் முற்றும் யாரையோ தேடியது🤗.........அதை கவனித்த ரகுபதிக்கு,ருத்ரனின் விழிகள் அலைமோதுவது பவானியை தேடித்தான் என்பது புரிந்தது.....ஒரு ஆணின் மனம் இன்னொரு ஆணுக்குத்தான் புரியும் போலும்🤗........
நயனாவின் முன் சென்று நிற்க,அவனுக்கு ஆனந்த கண்ணீரோடு ஆரத்தி எடுத்து ,நெற்றி திலகமிட்டாள் நயனா........பின்னர் ஆரத்தி தட்டை பணிப்பெண்ணிடம் வழங்கியவள்......பொங்கி வந்த அன்போடு ருத்ரனை அணைத்துக்கொண்டாள்.....அவனும் தான்💜😇........வார்த்தைகளே வரவில்லை.......அவர்களின் அன்பில் அனைவரும் பூரித்து நின்றனர்
"உன்னை எப்போது காண்பேன்,என்று தவித்துக் கொண்டிருந்தேன் ருத்ரா.....உன் வருகையை பற்றிய செய்தியை கேட்டதிலிருந்து,என் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது......பவானி புரியில் அனைவரும் நலம் தானே....பாட்டி எப்படி இருக்கிறார்?.....சித்தப்பா எப்படி இருக்கிறார்?....."மூச்சு விடவும் மறந்து கேள்வி கணைகளை கொடுத்தாள் நயனா......
தன் கண்களில் வடிந்த நீரோடு,.....நயனாவின் கண்ணீரை துடைத்தவாறே பேசினான் ருத்ரன்....."தாய் பவானியின் அருளால்,பாட்டியும்,சேனாதிபதியும் உடன் அனைவரும் பவானிபுரியில் நலமாக உள்ளனர்.....உன் கருவில் உதிக்கவிருக்கும் இன்னொரு ரகுபதிக்காக,அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்......."என்று ருத்ரன் கூற.....மௌனமாய் ரகுபதியை பார்த்தாள் நயனா......அவன் மனதின் தவிப்பு நயனாவுக்கு புரிந்தது.....