குட்டிமா... என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம்... வேண்டாம் டா.. நீ அங்க போய் வேலை பார்க்க வேணாம்... நான் வேற எதும் செஞ்சுக்குறேன்.... ப்ளீஸ் டா.. என்று அவள் தலையை வருடியபடி கூறினான்...அண்ணா.. எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல... வேலை தன பார்க்க போறேன்.... இதுல என்ன கஷ்டம்... நீ சின்ன வயசுல இருந்து எனக்காக தன சம்பாதுச்ச.... படிக்க வச்ச... இந்த படிப்பு எனக்கு நீ குடுத்தது.. இந்த உடம்புல ஒடுர ரத்தம் உன்னோடதுண்ணா.... இந்த ஒரு வேலையாவது நான் செய்யுறேன் ப்ளீஸ்.. என்றாள் கண்கள் கலங்க....
அவளின் பாசத்தை கண்டவன் நெகிழ்ந்தான்...
ஒரு வழியாக அவனை சாமாதானம் படுத்தி நாளையில் இருந்து வேலையில் சேர அனுமதி வாங்கினாள்....
அன்று இரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை... கிருபாகரனை முதன்முதலில் சந்தித்தது முதல் பிரிந்தவரை அனைத்தும் நினைவிற்கு வந்து அவளை தொல்லை செய்தது.... தன் விதியை நினைத்து நொந்தாள்....
முதல் நாள் தூக்கமே இல்லாமல் அடுத்த நாள் தலை கனத்தது... வேறு வழியின்றி அந்த பிரம்மான்ட சூப்பர் மார்க்கட்டை நோக்கி சென்றாள்....
உள்ளே சென்றவள்... நேரே கிருபாவின் அறையை நோக்கி சென்றாள்....மே ஐ கம் இன் ஸார்...
இவளின் வரவிற்காக காத்திருந்தவன்... எஸ் என்றான் முகத்தை கடினமாக்கிக் கொண்டு....
உள்ளே நுழைந்தவள்... அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்... இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த முகத்தில் தான் எவ்வளவு பிரகாசம் இருக்கும் தன்னை கண்டதும்.. என்று எண்ணியவளின் கண்கள் கலங்கியது... அதை அவனுக்கு காட்டாதவாறு நின்றவள்...
இன்றில் இருந்த ஜாயின் பண்ணுகிறேன் ஸார்... எனக்கு என்ன வொர்க் என்று கூறினால் செய்ய தயாராக இருக்கிறேன்...
ம்ம் மிஸ் அகல்யா.... யூ ஆர் மை பி.ஏ பிரம் நவ்... ஓகே.. உங்க வேலை என்னன்னா... என் கூடவே இருக்குறது ஐ மீன்... உங்களுக்கு டியூட்டி மார்னிங் 9 to 6... என்னோட மெயில்.. அப்புரம் மை டெய்லி டுயிட்டி லிஸ்ட்... என்கூட மீட்டிங் வரற்து.... அப்புறம் மத்தத போக போக சொல்றே்.. ரைட்... இப்ப அந்த சிஸ்டம் உங்களோடது... போய் என்னோட மெயில் செக் பண்ணுங்க... அன்ட் டுடே பிரோகிராம் இந்த பைல்ல இருக்கு.... டேக் அ நோட் ஆன் இட்.. என்று அவள் பார்க்க வேண்டிய வேலைகளை கட கட வென அவளிடம் கூறியவன்... தன் பைலில் மூழ்கினான்...
அகிக்கு அவனின் நேற்றைய பேச்சிற்கும் இன்றைக்கும் எவ்வளவு வித்யாசம்.. என்று வியந்தவள்... அவன் சொன்ன சிஸ்டமை நோக்கி சென்றாள்...
மெயில் அனைத்தையும் செக் செய்துவிட்டு அவன் குடுத்த பைலை திறந்து பார்த்தவள் திகைத்தாள்...
அதில் முதல் பக்கத்தில்...
" my first enemy ms.akalya" நீ நினைத்து பார்க்காத அளவுக்கு உன்னை டார்ச்சர் பண்ணுவேன்... ஆல் தி பெஸ்ட்.. அன்ட் கிரேட் வெல்கம் டு ஹெல்.... என்று எழுதியிருந்தது.... அதை பார்த்தவள் அதிர்ந்து நிமிர்ந்தாள்...
அவன் இதற்காகவே காத்திருந்தவன் போல் அவளை நெருங்கினான்....
அவன் முன்னேறி வருவதை பார்த்தவள் பின்னேறினாள்.... போய் சுவற்றில் முட்டியவள்.... அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.... அவளை நோக்கி முன்னேறியவன் அவளின் இருபக்கமும் கைகளை ஊன்றி நெருங்கி நின்றான்....
ப்ளீஸ் கிருபா.. நான் பண்ணது தப்புதான்... என்ன மன்னுச்சுடு...ப்ளீஸ் என்ன விட்று... ப்ளீஸ்..
யாரடி விட சொல்ற... உன்னயா?? நெவர்... உன்ன விட்டா என்ன மாதிரி முட்டாள் யாருமே இருக்க மாட்டாங்க... ஒரு காலத்துல உன் பேச்ச கேட்ட கிருபானு நினைச்சயா... கிரபாகரன் டி... அடி பட்ட புலியா வந்துருக்கேன்... வேட்டையாடாம விட மாட்டேன்... என்றான் கண்கள் சிவக்க....
அவளிற்கு தாரை தாரையாக கண்ணீர் சிந்தியது...
ப்ளீஸ் கிருபா.. என்று சொல்லி முடித்தவளின் முகத்தை பற்றி... அவள் இதழை கவ்வினான்... அவனிடம் இருந்த திமிறியவளை தன் கைகளில் அடக்கியவன்... அவள் உதட்டை வலிக்க செய்து... சை என்று வேகமாக அவளை விட்டு விலகி ருமை விட்டு வெளியேறினான்....
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....