தன் கடந்த காலத்தில் இருந்து மீண்டவன்...எப்படி உன்னால் முடிந்தது அகி.. என்னை விட்டு பிரிய... என்னால் தாங்க முடியவில்லையே... நீ இல்லாமல் நான் எவ்வளவு கஷ்ட பட்டேன் தெரியுமா?? நான் அழாத நாள் இல்லை.... ஆனால் யாரிடமும் என்னால் எதையும் கூறவும் முடியவில்லையே... என்ன வாழ்க்கைடா இது... சரி.. இது வரைக்கும் உன்னை நான் இழந்தது போதும்... இனிமே ஒரு நிமிடம் கூட உன்ன விட மாட்டேன் நான்.. இது சத்தியம்... கூடிய சீக்கிரம் நம்ம திருமணம் நடக்கனும்.... நீ என் கூடவே என் மனைவியா.. என் தோழியா.. என் மூச்சுக்காற்றா... என் கூடவே கடைசி வரைக்கும் இரு.. அது போதும் எனக்கு... என்று தன் மடியில் படுத்திருந்த அகியை பார்த்து தன் மனதில் நினைத்தபடி அவள் தலையை கோதி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்...அவனின் ஸ்பரிசத்தில் அவள் கொஞ்சம் கொஞ்சமாக சியநினைவுக்கு மீண்டாள்....
அவனின் முகத்தை அருகாமையில் கண்டவள்.. திகைத்து அவனை விட்டு விலகினாள்.... அவனும் அவளை தடுக்கவில்லை...
அவன் ரூமிலேயே அவளுக்கென தனி கேபின் இருந்தது... அதற்குள் சென்று தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்....
அவள் எப்படி நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்....
தன் சாவியைக்கொண்டு வீட்டை திறந்து நுழைந்தவள்... அண்ணன் வரும்போது தன் முகம் இப்படி இருந்தாள் பதறிவிடுவான் என்ற சிந்தனையுடன் குளிக்க சென்றாள்...ஆனால் அவளை வளர்த்தவனிடம் இருந்து எந்த ஒப்பனையும் தப்பாது என்பதற்கு ஏற்ப அவன் வந்தவுடன் கேட்ட முதல் கேள்ளி... என்னடா குட்டி முகம் வீங்கிருக்கு?? என்னடா ஆச்சு?? உடம்பு எதும் முடிலயா??
அவனின் கேள்வியில் திகைத்தவள் வேறு வழி இல்லாமல்... கொஞ்சம் தலைவலிண்ணா... அதான் படுத்து ரெஸ்டு எடுத்தா சரியாகிடும்... என்று மழுப்பிவிட்டு ரூமிற்குள் சென்று படுத்தாள்... ஆனால் தூக்கம் அவளை விட்டு தூரம் சென்றிருந்தது....
தான் எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை இழந்திருக்கிறோம் என்பதை நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது... எங்கு சத்தமாக அழுதாள் அண்ணன் கண்டுபிடித்துவிடுவானோ என்ற பயத்துடன் தன் தலையணையில் முகம் புதைத்தாள்....
சிறிது நேரத்தில் ரூமிற்குள் வந்தவன் அவள் உடம்பு குலுங்குவதை பார்த்து அருகில் ஓடி வந்து அவளை தன் மடி தாங்கினான்...
அவளிற்கும் அந்த மடி தேவையாக இருந்தது... அவன் தாயுமானவன் அல்லவா!!! அவன் மடியில் படுத்து தன் துக்கம் அனைத்தும் போகுமாறு கதறி அழுதாள்..... கண்ணம்மா.. டேய்.. என்னடா... அங்க எதும் பிரச்சனையா?? அண்ணாட்ட சொல்லுமா தங்கம்.... நான் இருக்கேன் டா உனக்கு..நீ வேளைக்கு போக வேண்டாம்... நான் அவர் கால்ல விழுந்தாவது நம்ம கடைய காப்பாத்துரேன்... நீ நம்ம வீட்டு இளவரசியா எப்போதும் சரிச்சிட்டே இருடா.. அது போதும் இந்த அண்ணனுக்கு.. என்று அவளை அணைத்தவாறு தானும் கண்ணீர்விட்டான்... அந்த அண்ணனும் தங்கையும் அந்த இரவு கண்ணீரால் கரைந்தனர்.... தன் அண்ணனின் மடியிலேயே படுத்து துயில் கொண்டாள்... அவன் அவளை மடியேந்தி தானும் கட்டிலில் சாய்ந்து தூங்கினான்.. இருவரும் மற்றவருக்கு ஆறுதலாக தூங்கினர்... தன் பெற்றோரை இழந்த போது இப்படிதான் அகி அவனின் மடிக்கு ஏங்குவாள்.. இப்போதும் அது தொடர்ந்தது...
அங்கு கிருபா தன் அறையில் நடைபயின்று கொண்டிருந்தான்.... அவன் செய்தது அவனுக்கே அருவெறுப்பாக இருந்தது.... அவள் மேல் இருந்த அசைக்க முடியாத அன்பு தான் எல்லாவற்றிருக்கும் காரணம் அதற்கு அவள் தனக்கு வேண்டும்.. தன்னை விட்ட மற்றொருமுறை சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே தான் அப்படி நடந்ததாக முடிவிற்கு வந்தான்.... ஆதலால் அவளை திருமணம் செய்வதே நல்ல முடிவு என்று நினைத்தவன் அதன் பிறகே நித்திரா தேவி அவனை அணைத்தாள்....
அகியின் வாழ்க்கை பயணம் தொடரும்....