டேய் குட்டி.. எந்திரி டா செல்லம்.... அத்தான்க்கு பசிக்குது.. சாப்ட்டு வந்து தூங்கலாம்...அவளோ... போங்க அத்தான்.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது.. என்று அவனை கட்டிக் கொண்டு மீண்டும் தூக்கத்தை தொடர...
அடியே ராட்சசி பாவம் டி நான்.. நம்ம எதுக்கு வந்துருக்கோம்??? நேத்து நைட் ரூம்க்கு வந்ததுல இருந்து கும்பகர்ணி மாதரி தூங்குறியே என்று புலம்பியபடி தலையில் அடித்தவன்.. அவளை விலக்கிவிட்டு எழுந்து சென்று பிரஷ் ஆகி ரூம் சர்விஸிற்கு போன் செய்து காலை உணவை வரவழைத்தவன்.. பெரும்பாடுபட்டு அவளை எழுப்பி குளியலரைக்குள் தள்ளி கதவை சாத்தினான்...
சிறிது நேரத்தில் காலிங் பெல் அடிக்க... காலை உணவை வாங்கி அங்குள்ள மேஜையில் அடுக்கி வைத்தவன்... தன்னவளின் வருகைக்காக காத்திருந்தான்... அவனை ஏமாற்றாமல் பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தவளை பார்த்தவன் காலை உணவை மறந்து அவள் அருகில் விரைந்தவன் அவளை இழுத்து அணைத்து முதல் முத்தத்தை உச்சியில் பதித்தான்.... தன் முத்த யுத்தத்தை தொடர்ந்தவன் தன் இணையோடு சேர.. அவள் கிறங்கி சாய.. அவளை கைகளில் அள்ளியவன் பெட்டை நோக்கி முன்னேறி அவளை பெட்டில் கடத்தியவன்.. அவள் முகம் நோக்கி குனிய அவளோ கண்களை இறுக மூடிக் கொண்டாள்....
அவள் முகத்தோடு முகத்தை இளைத்தவன்.. அவள் காதின் அருகில்.. குட்டிமா... ப்ளீஸ் டா.. இதுக்கு மேல் என்னால முடியாதுடா.. ப்ளீஸ்.. உனக்கு இஷ்டம் தன?? என்று அவள் முகம் நோக்க.. அவளோ அவனின் கூற்றில் முகம் சிவந்தவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்... அதையே சம்மதமாக ஏற்றவன்... அவளை தன்னவளாக்கிக் கொண்டான்....
மொத்தம் முடிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு விலகியவனை விலக விடாமல் அவள் அவனுள் புதைந்தாள்.... அவளை தன்னோடு இறுக்கியவன் அவளின் காதில் குனிந்து... டேய் குட்டிமா.. ஒரு பாட்டு பாடுடா செல்லம்.. ப்ளீஸ்.. என்றான்.. தன்னவனின் ஆசையை நிறைவேற்ற அவள் பாடினாள்....