அர்ஜுன் கூறியதை கேட்டவள் சிறிது நேரம் எதும் பேசவில்லை... பின் ஓய்ந்து போய் அமர்ந்திருந்த தன் அண்ணன் பக்கம் திரும்பினாள்... அண்ணா.. நம்ம அவர்ட்ட பேசலாம்... கொஞ்சம் கொஞ்சமா அடைக்க வழி கேட்போம்... நான் படிப்ப முடுச்சுட்டேன்ல... நானும் வேலைக்கு போரேன்.. இரண்டு பேரும் சேர்ந்து அடைக்கலாம்... என்ன அவர்ட்ட கூட்டிட்டு போ... என்றாள் முடிவாக..அவனுக்கும் வேறு வழி இல்லாததால் சரி என்று ஒப்புக் கொண்டான்...
மறுநாள் காலை பத்து மணிக்கு அந்த பிரமாண்ட டிபார்ட்மென்டல் ஸ்டோர் முன் நின்றிருந்தனர் இருவரும்....
அர்ஜுன் அகியை அழைத்துக் கொண்டு எம்.டி இருக்கும் பிளோர்க்கு சென்று ரிசப்ஷனில் பெயரை சொல்லிவிட்டு இருவரும் காத்திருந்தனர்....
பத்து நிமிட காத்திருப்பிற்கு பிறகு அவர்களுக்கு அழைப்பு வந்தது....
தன் அண்ணன் பின்னால் உள்ளே நுழைந்த அகி அங்கிருந்தவனை பார்த்து திடுக்கிட்டால்.... அவள் வாய் கிருபா என்று முனுமுனுத்தது....
அவள் முகத்தில் இருந்த அதிர்வு அவன் முகத்தில் சிறிதும் இல்லை...
வாங்க அர்ஜுன்... உங்களுக்கு இன்னும் இரண்டு நாள் டைம் குடுத்துருக்கேனே...என்ன விஷயமா வந்தேங்க??
சார் இது என் சிஸ்டர் அகல்யா... உங்கட்ட பேசனும்னு சொன்னா... அதான் கூட்டிட்டு வந்தேன்...
ரைட்... நீங்க வெளில வெய்ட் பண்ணுங்க... நான் உங்க சிஸ்டர்ட்ட பேசிட்டு உங்கள கூப்டுறேன்... என்றான் கூலாக...
அதை கேட்ட அர்ஜுன் அதிர்ந்து தன் தங்கையை பார்க்க... அவள் அவனை வெளியே வெய்ட் பண்ண சொன்னால்... வேறு வழி இல்லாமல் அவனும் எழுந்து சென்றான்...
அவன் கதவை அடைக்க காத்திருந்த கிருபாகரன் அகல்யாவின் பக்கம் தன் பார்வையை திருப்பினான்...
கிருபா.... என்றாள் கண்களில் ஏக்கமாக...
அவளின் அழைப்பில் கிருபாகரனின் கண்கள் கோவை பழமாக சிவந்தது.... யாருக்கு யார் டி கிருபா... மைன்ட் யுவர் வேர்ட்ஸ்... கால் மீ சார்.. என்றான் கோவமாக
அவனின் பேச்சில் அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்தது...
வெல்கம் மிஸ் தன?? என்று அவள் கழுத்தை பார்த்தான்... ம்ம் மிஸ் தான்... வெல்கம் மிஸ் அகல்யா.. என்ன பேசனும் என்ட்ட???
ஸார்... நாங்க வாங்குன கடன நான் அடைக்குறேன்... கொஞ்சம் டைம் வேணும்... வேலைக்கு போய் அடைச்சுருவேன்.. ப்ளீஸ் ஸார்... என்று அவனிடம் கெஞ்சினாள்....
உங்க அண்ணனுக்கு நான் நிறைய டைம் குடுத்தாச்சு... இனிமே டைம் தர முடியாது.... ஸாரி... வேணும்னா ஒன்னு பண்ணலாம்.... என்றான் அவள் கண்களை பார்த்தபடி..
என்ன ஸார்.. என்று கண்களில் மின்னலுடன்...
நீ ஒரு நாள் மட்டும் என் கூட வாரயா??? கடனே வாங்கலனு எழுதி தாரேன்.. என்றான் கண்களில் விஷமத்துடன்...
அதைக்கேட்ட அகியின் கண்களில் வலி தெரிந்தது.... அவள் கண்களின் வலியை பார்த்தவன் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்...
பின் சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது...
அதன் பிறகு கிருபாவே தன் பேச்சை தொடர்ந்தான்....
ஒரே ஒரு முடிவு வேணா சொல்றேன்... நீ என் கம்பேனிக்கு வேலைக்கு வந்து உன் அண்ணன் வாங்குன கடன அடை.. என்றான் முடிவாக...
அகியும் யோசித்து கூறுவதாக கூறி விடைபெற்றாள்....
கிருபா அவள் போவதையே பார்த்திருந்தான்....
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்...