ஏன் அகி.. நீ வரமாட்டேன்னு சொல்ற.. எவ்ளோ ஜாலியா இருக்கும்... நீ நான் அண்ணா ராஜிவ் நாலு பேரும் நல்லா ஆட்டம் போடலாம்....ப்ளீஸ் டி.. சரின்னு சொல்லேன்... என்று அகியை டூருக்கு வர கெஞ்சிக் கொண்டிருந்தாள் சத்யா...
இது அவர்களுக்கு பைனல் இயர் என்பதால் கல்லூரி நிர்வாகம் அவர்களை டூருக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தது.... யூஜி.. பீஜி.. இரண்டிலும் உள்ள பைனல் இயர் மாணவ மாணவிகள் செல்லலாம்... அதற்கு தான் சத்யா அகியை கெஞ்சிக் கொண்டிருக்குறாள்...
கடைசியாக சத்யா ராஜிவ் மற்றும் கிருபா மூவரும் கம்பெல் பண்ணி அகியை அழைத்து சென்றனர்...
பெங்களூர் மைசூர் மிகவும் ரம்மியமாக இருந்தது....
மாணவ மாணவிகள் அனைவரும் உர்சாகமாக சுற்றித்திரிந்தனர்.... அது மொத்தம் ஐந்து நாள் டூர்...
முதல் நாள் பெங்களூர் சென்று அங்கிருந்த பூங்காவில் நுழைந்தவுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தை காண்பித்து 5 மணிக்கு அங்கே வந்துவிடுமாறு கூறிவிட்டு அங்கிருந்த மரபென்சில் அமர்ந்தனர்... மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களோடு அந்த பூங்காவை வலம் வந்தனர்.... ஆசிரியர்களின் பார்வையில் இருந்து மறைந்ததும் சத்யாவிற்கும் ராஜிவிற்கும் தனிமை கொடுக்க வேண்டி கிருபாவும் அகியும் மறுபக்கம் சென்றனர்... 5மணி ஆவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது....
சத்யாவும் ராஜிவ்வும் கைகளை கோர்த்தபடி தங்கள் உலகில் சஞ்சரித்தனர்....
கிருபா மெதுவாக அகியின் கைகளை பற்றினான்.... அவள் யாரும் பார்த்துவிடுவார்கள் என்ற பயத்துடன் அவனிடம் இருந்து கைகளை விலக்க முற்பட்டாள்.... ஆனால் அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது...
கைகளை பற்றியவாரு அவளை ஒரு இடத்திற்கு இழுத்துச் சென்றான்.... அது ஒரு குகை போல் இருந்தது... யாரும் வர வாய்ப்பே இல்லாத இடத்திற்கு அவளை இழுத்துச் சென்றான்... அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவள் அந்த இடத்தை பார்த்து திகைத்தாள்...