ஹா ஹா ஹா ஹா.... ஹி ஹி ஹி ஹி... ஹொ ஹொ ஹொ.... அய்யோ மச்சான்... என்னால முடில டா... எப்படி டா இப்படி டைமிங் பார்த்து என்ன கிஸ் பண்ண.... ஹா ஹா ஹா... அதும் இல்லாம ஐ லவ் யூ வேற.... ஹா ஹா ஹா... என் தங்கச்சியும் டைமிங் கீப் அப் பண்றா மச்சான்... செம டைமிங்ல... ஹா ஹா ஹா...டேய் ஓடிரு... உதை வாங்குவ... ஏற்கனவே என்ன பார்த்தா பேய பார்த்த மாதிரி ரியாக்சன் குடுப்பா... இதுல இத வேற பார்த்துட்டா.. மச்சான் எதாவது ஐடியா குடேன்... உன் தங்கச்சிய கரைக்ட் பண்ண...
அடப்பாவி... தங்கச்சிய கரைக்ட் பண்ண அண்ணன்ட்ட ஐடியா கேக்குற முதல் ஆள் நீ தான் டா.. போய் எதாவது பண்ணு.. நான் உன் தங்கச்சி கூட டுயட் பாட போறேன்... என்று பெட்டில் குப்பறப்படுத்து தூங்க ஆரம்பித்தான் கிருபா...
அர்ஜுன் கிருபாவை மிதிக்க அருகில் சென்று... பின் மிதிக்கும் நேரத்தில் தன் தர்ம பத்தினி வந்தாலும் வருவா.. என்று பயந்து ரூமை விட்டு வெளியே ஓடினான்...
கிருபாவின் அறையை விட்டு வெளியேறியவன்... நேராக கீர்த்தியின் அறைக்கு சென்று பார்த்தபோது.... அவள் சோபாவில் அமர்ந்து எதிரில் தெரிந்த சுவரை வெறித்தாள்....
போச்சு... மேடம் நிஜமாவே என்ன கேவலமாதான் நினைச்சுருப்பா.... சரி சமாளிப்போம்... என்று உள்ளே நுழைந்து கதவை பூட்டி.. அவள் அருகில் சென்று அமர்ந்தான்... அவன் அமரும் வரை சுவரை வெறித்தவள்... அருகில் ஆள் அமருவதை உணர்ந்து திரும்பி பார்க்க... அர்ஜுனை பார்த்தவள் திகைத்து... பின் வேகமாக சோபாவை விட்டு எழுந்தாள்....அவளின் கைப்பற்றி அவளை அருகில் அமர்த்தியவன்.... அவளை பார்த்து ஒரு காலை மட்டும் மடக்கி திரும்பி அமர்ந்தான்....
இதை எதிர்பாராதவள்.... சிறு பிள்ளை போல் கண்ணை கசக்கி உதட்டை பிதிக்குக் கொண்டு அழ ஆரம்பரத்தாள்... சின்ன குழந்தை போல் அழுதவளை பார்த்து அர்ஜுனிற்கு சிரிப்பு தான் வந்தது.... தான் சிரித்தாள் கூடுதலாக கண்ணீர் வடிப்பாள் என்பதை உணர்ந்தவன்... தன் சிரிப்பை அடக்கி... கீர்த்திமா.. என்று முதல் முறையாக அவள் பெயர் சொல்லி அழைத்தான்....
ம்ம்... என்று அழுகையுடனே கேட்டாள் அவள்....
இங்க பாரு...என்ன பாரு... ஏன் அழுற??? நான் இப்ப எதும் பண்ணேனா??
இல்ல... என்று அழுகையுடனே தலையசைத்தாள்...
முதல்ல அழுகைய நிப்பாட்டு... என்ன பாரு... நான் யாரு??அவன் கூறியதும் அழுகையை நிப்பாட்டி கண்ணீரை துடைத்தவள்... அவனை நிமிர்ந்து பார்த்து அகிமாவோட அண்ணன்.. என்றாள் சின்ன குரலில்...
உனக்கு நான் யாரு??
அர்ஜுன் அத்தான்...சரி இந்த அத்தான உனக்கு பிடிக்குமா???
பிடிக்காது... போங்க... என்றாள் முகத்தை திருப்பியபடி...அவளின் பதிலில் திகைத்தவன்... என்னடா அர்ஜு பொசுக்குனு பிடிக்காதுனு சொல்லிட்டா.. என்று மனதில் நினைத்தபடி... சரி மேலும் முயர்ச்சிப்போம்... ஏன் டா அத்தான பிடிக்காது.. என்று பாவமாக கேட்டான்....
நீங்க அண்ணாவ கிஸ் பண்ணேங்க.. நீங்க பேட் பாய்.... அதான்... என்றாள்...
அவளின் பதில் அர்ஜுனிற்கு அழுவதா சிரிப்பதா.. என்றே தெரியவில்லை.... மனதில் தலையில் அடித்தபடி அவளிடம்.. இனிமே அவன கிஸ் பண்ண மாட்டேன்... இப்ப அத்தான பிடிக்குமா??நோ.. நீங்க கிஸ் மட்டும் பண்ணல.... அண்ணாவ பார்த்து ஐ லவ் யூ சொன்னேங்க... என்றாள் கோவமாக...
இப்போது அர்ஜுன் வாய் விட்டு சிரித்துவிட்டு... ஏன் நான் அவனுக்கு ஐ லவ் யூ சொன்னா உனக்கு கோவம் வருது... என்று ஒற்றை புருவத்தை ஏற்றி கேட்டான்...
அது... அது... அதெல்லாம் எனக்கு தெரியாது... நீங்க என்ன அன்னைக்கு கிஸ் பண்ணேங்க... வேற யாரையும் கிஸ் பண்ண மாட்டேங்கனு நெனைச்சேன்... ஆனா அண்ணாவ பண்றேங்க.. என்று மீண்டும் உதட்டை பிதுக்கியபடி அழ ஆரம்பித்தாள்...
அவளை நெருங்கி அமர்ந்தவன்... அப்ப நான் வேற யாரையும் கிஸ் பண்ணலேனா.. உனக்கு பிடிக்குமா??
சிறிது நேரம் யோசித்தவள்.. ம்ம் பிடிக்கும் என்று தலையை ஆட்டினாள்....
அந்த பதிலில் இன்னும் அவளை நெருங்கியவன்..உன்ன கிஸ் பண்ணா பிடிக்குமா???
ம்ம் பிடிக்கும்... அண்ணா என்ன சின்ன வயசுல இருந்து கிஸ் பண்ணுவாங்க.... அப்புறம் இப்ப அகிமாவும் கிஸ் பண்ணுவாங்க... நீங்களும் கிஸ் பண்ணா பிடிக்கும்... என்றவளின் பதிலில் நிஜமாவே அர்ஜுனிற்கு நெஞ்சு வலி வராதது ஒன்று தான் குறை....
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....