அகிமா... அகிமா.. எங்க இருக்கேங்க??இதோடா... குளிக்க போரேன்.. என்ன பண்ணனும் என் செல்லத்துக்கு??
எனக்கு சாரி கட்டி விடணும் அகிமா.. என்று சிணுங்கினாள் கீர்த்தி...
சரிடா செல்லம்... நீ பாவாடையும் பிளவுஸ் போடு டா... நான் 5 மினிட்ஸ் ல குளிச்சுட்டு வந்துரேன்.. தலை காயனும்ல... சரியா?? என்றுவிட்டு அடாச்சுடு பாத்ரூமில் குளிக்க சென்றாள்...
அன்று அகி கிருபா கல்யாண பத்திரிக்கை வைக்க குல தெய்வ கோவிலுக்கு செல்கின்றனர்... அதனால் தான் என்றும் சாரி கட்டாதவளை சாரி கட்ட சொல்லிருந்தான் கிருபா... கீர்த்திக்கும் சாரிக்கும் காத தூரம் ஆதலால் அவள் அகியின் உதவியை நாடி வந்திருந்தாள்....
அகி சென்றதும் கதவை உள் பக்கமாக தாள்பால் போட்டுவிட்டு நைட்டியை கலட்டினாள்... பிளவுஸ் உள்பாவாடை அணிந்தவள் அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள்... பாவம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை... கதவை பூட்டும் போது டபில் லாக் போட்டாள் தான் லாக் ஆகும் என்பது... அவள் ஒரு லாக் மட்டும் போட்டிருக்க... அகியை தேடி வந்த அர்ஜுன் கீர்த்தியை அந்த நிலைமையில் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை....
கதவை திறந்து அர்ஜுன் ரூமிற்கு வந்தவன்... அங்கு அகி இல்லாமல் திரும்பி செல்ல கதவை நோக்கி திரும்பினான்.... அப்போது தான் சைடில் உள்ள சோபாவை பார்த்தவன் அவள் அமர்ந்திருந்த கோலத்தில் தன்னிலை மறந்தான்...
அர்ஜுனை பார்த்தவள் திகைத்து பின் தன் மார்பின் குறுக்கே கையை வைத்து மறைத்தாள்....
அர்ஜுன் அவளை நோக்கி முன்னேறினான்... அவன் ஒவ்வொரு அடியாக முன்னேற.. கீர்த்தி சோபாவில் இருந்து வேகமாக எழுந்தவள் பின்னடைந்தாள்... அவனின் கைக்கு சிக்காமல் ஓடியவள் கதவை அடைந்தாள்.... ஆனால் அதற்குள் அவளின் கைப்பற்றி இழுத்தவன் சோபாவில் தள்ளி... அவளின் மேல் சரிந்தான்... அர்ஜுன் உதடு அவள் முகம் முழுவதும் வலம் வந்து இறுதியில் தன் இணையை சென்றடைந்தது.... கீர்த்தியின் கண்கள் அதிர்ச்சியுடன் அர்ஜுனை நோக்கியது.... எல்லாம் சில நொடிதான்... அடுத்த நொடி அர்ஜுன் அவளை விடுவித்து வேகமாக எழுந்து வெளியே சென்றிருந்தான்....
கீர்த்தி ஆணி அடித்தது போல் எழாமல் அப்படியே சோபாவில் படுத்திருந்தாள்... சிறிது நேரத்தில் வெளியே வந்த அகி.. அவளை எழுப்பி சாரி கட்டிவிட்டு தலை பிண்ணி மேக்அப் பண்ணி வெளியே அனுப்பிவிட்டு தான் ரெடி ஆக சென்றாள்...
ரூமை விட்டி வெளியே வந்தவள் ஹாலில் சென்று அமர்ந்தாள்... அதுவரை கூட அவள் பேய் அடித்தது போல் தான் இருந்தாள்... அங்கு அர்ஜுனின் நிலையோ இதை விட மோசமாக இருந்தது....
ஏன் டா உனக்கு அறிவு இல்ல?? அவ சின்ன பிள்ளை டா.. வெக்கமாவே இல்லயா டா உனக்கு.. போயும் போயும் உனக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ??? நேத்து தான் முதன் முதல்ல பார்த்துருக்க அவள.... இன்னும் முழுசா அவ உன் மூஞ்சிய கூட சரியா பார்த்துருக்க மாட்டா... அவள போய் கிஸ் பண்ணிருக்க?? தூ... வெக்கமா இல்ல... நீயெல்லாம் மனுசனே இல்ல டா... அவ இப்ப தான் டா காலேஜ் முடுச்சுருக்கா... நீ பண்ண விஷயம் மட்டும் கிருபாவுக்கு தெருஞ்சுச்சு கீரின் கீரின்னா திட்டுவான்.... அகி நெஞ்சுலயே மிதிப்பா... அய்யோ இப்ப நான் எப்படி கீர்த்திமா முகத்துல முழிப்பேன்... என்ன இருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி... அதுல மாற்றம் இல்ல.. சரி சமாளிப்போம்... என்று இவ்வளவு நேரம் தன் ரூமில் கண்ணாடியை பார்த்து தன்னையே திட்டிக் கொண்டிருந்தவன் வெளியே சென்றான்....
அங்கு ஹாலில் கீர்த்தியை பார்த்தவனின் கை தானாக தன் உதடை தடவியது... அதை பார்த்த கீர்த்தி வேகமாக எழுந்து தன் ரூமை நோக்கி ஓடினாள்....
முதல் முறையாக கீர்த்தியை சேரியில் பார்த்தவன் அவளின் பின்னாடியே அவன் இதயத்தையும் அனுப்பிவைத்தான்.....
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்...