♥19♥

4.7K 151 40
                                    


                        அவன் அன்று தான் தன் வாழ்க்கையில் கடைசியாக அழுதது.... அதன் பிறகு தன்னுள் இறுகினான்... சிரிப்பு என்பது மருந்துக்கு கூட அவன் முகத்தில் இல்லை... தன் அத்தையிடம் சென்று கம்பெனியின் பொருப்பு மொத்தத்தையும் தன் பொருப்பில் ஏற்றான்....  தன் குடும்ப தொழிலை நன்றாக முன்னேற்றினான்.... ஆனால் அத்தை அவன் திருமணத்தை பற்றி பேசினாள் மட்டும் பிடி கொடுக்காமல் நடந்துக் கொண்டான்..... நாளுக்கு நாள் அவர்கள் தொழில் வளர்ந்தது... தன் சொந்த ஊரில் புகழ் பெற்ற நம்பர் ஒன் அங்காடியாக மாறியது... ஆனால் சொந்த வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை... அவனால் அகியை மண்ணிக்க முடியவில்லை... அவளை பழி வாங்க எண்ணினான்.... அப்போது தான் அரஜுன்னின் கடை நஷ்டத்தில் ஓடுவதை பற்றி அறிந்து கொண்டு அதை தனக்கு சாதகமாக பயண்படுத்திக் கொண்டான்....

               ரோஜா தோட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்தவன் தன் கடந்த காலத்தில் இருந்து மீண்டான்.... தன் விதியை நினைத்து நொந்தபடி எழுந்த மருத்துவமனை நோக்கி தன் பைக்கில் சென்றான்....

              அங்கு அகியோ தன் அண்ணனின் மடியில் அமர்ந்து அழுதபடி அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து துயில் கொண்டாள்.....  அவன் அவளை விட்டு இம்மியும் நகரவில்லை.... இனிமேல் தங்கை நிலை என்ன?? என்ற நினைப்பு அவனை பாலை வனத்தில் தள்ளியது....

                அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ... கதவை திறந்துக் கொண்டு கையில் சாப்பாடு பார்சலுடன் நுலைந்த கிருபாவை பார்த்ததும் அவ்வளவு நேரம் இருந்த நிலை மாறி ஒரு முடிவுடன் தன் தங்கையை பெட்டில் கிடத்திவிட்டு கிருபாவை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்....

                 உங்களுக்கும் அகிக்கும் நடுவில் என்ன?? என்றான் ஒரே கேள்வியாக...

                 அந்த ஒரு கேள்வியே கிருபாவுக்கு போதுமானதாக இருந்தது..... ஆதி முதல் அந்தமாக அவனுக்கு தெரிந்த அனைத்தையும் கூறி முடித்தான்....

                 சோ.. அன்னைக்கு என்னமோ நடந்துருக்கு... அது என்னனு கண்டு பிடிக்கனும்.... அப்ப தான் அகி ஏன் உங்கட்ட இருந்து விலகுனானு நமக்கு தெரியும்.... என்றான் யோசனையாக...

                ம்ம் ஆமா அர்ஜுன்... நானும் எவ்ளவோ டிரை பண்ணேன்... ஆனா எந்த குளுவும் கிடைக்கல... தெரில என்ன ஆச்சுனு.... என்றான் கிருபா வருத்தமாக....

                அர்ஜுன் அகிய எனக்கு கல்யாணம் பண்ணி தாங்க ப்ளீஸ்.... இனிமே ஒரு நிமிடம் கூட நான் அவளை பிரிய மாட்டேன்... ப்ளீஸ் அர்ஜுன்.. என்றான் அவனின் கையை பற்றியபடி...

                ஸார்... இதுல அகிதான் முடிவு பண்ணனும்... நீங்க அவ கண் முழுச்சதும் அவட்ட பேசி முடிவு பண்ணுங்க.... என்றான் முடிவாக....

               ம்ம் சரி... ஆனா.. இந்த ஸார்லாம் வேணாம்... கிருபானே கூப்டுங்க... என்றான் புன்னகைக்க முயன்றபடி... ஆனால் புன்னகை தான் வருவேனா என்றது....

             ம்ம் ஓகே கிருபா.. என்றான் அர்ஜுனும் புன்னகைக்க முயன்றபடி...

             தன் அன்பிற்கு உரியவர்களை சோகப்படுத்திவிட்டு அங்கு அகி துயில் கொண்டிருந்தாள்.....

            ஆனால் கிருபாவிற்கு அவளின் தற்காெலை முயற்சி நெறுஞ்சி முள்ளாக தைத்தது.... அதன் காரணத்தை அறிய வேண்டும் என்ற முடிவுடன் அகியின் வீட்டை நோக்கி கிளம்பினான்....

             ஆனால் அங்கு எல்லா புதிரும் வெளியே வரப்போகிறது... அதில் அவன் அடித்துச் செல்ல போகிறான்.... அவன் எதிர் பார்க்காத பல விஷயங்கள் அகியின் வாழ்க்கையில் இருக்கிறது என்பதை அறிந்திருந்தால் அவன் சென்றிருக்க மாட்டானோ???

              அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

அகல்யாWhere stories live. Discover now