♥2♥

6.4K 147 9
                                    


                     இருவரும் இராமேஷ்வரம் வந்தடைய சத்யாவின் அப்பா வந்திருந்தார்...

                    அப்பா.. எப்படி இருக்கேங்க??

                    நான் நல்லா இருக்கேன்மா.. நீ எப்படி இருக்க?? அர்ஜுன் இன்னும் வரல போல...

                  நல்லா இருக்கேன்ப்பா.. அதோ அண்ணா வந்துட்டாங்க.. என்று அர்ஜுனை கை காட்டினாள்...
  
                  அர்ஜுனை பார்த்த அகல்யா ஓடி சென்று அவனின் தோல் சாய்ந்தாள்...

                 அவளை ஒரு கையால் அணைத்தபடி சத்யாவின் அப்பாவிடம் வந்தவன்... இருவரையும் நலம் விசாரித்துவிட்டு அகியுடன் வீட்டை நோக்கி களம்பினான்...

                என்னடா குட்டி.. அமைதியா வர்ற??

               அப்டிலாம் இல்ல அண்ணா... வண்டி ஓட்டும் போது டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன்... வேற எதும் இல்ல... இனிமே நான் எங்கயும் போக மாட்டேன்... நீ என்ன போக சொல்ல கூடாது.. ப்ளீஸ் அண்ணா.... இனிமே புல்லா உன் கூட மட்டும் தான் இருப்பேன்.. என்று அவனின் தோல் சாய்ந்தாள் அகி...

                அவளின் பேச்சை கேட்டு கலகலவென சிரித்தவன்... எப்படிடா கூட இருக்க முடியும்... கல்யாணம் ஆகி இன்னோரு வீட்டுக்கு போனும்ல... அது வரைக்கும் என் பக்கத்துலயே வச்சுக்குறேன்.. என்றான் அவன்

              போ எனக்கு கல்யாணம் வேணாம்.... என்ன யார்டயும் விட்றாத... ப்ளீஸ்.. அப்புறம்... அப்புறம்... நான் ரொம்ப தூரம் போய்டுவேன்... உன்ன விட்டு போய்டுவேன்... என்ற அவளின் வார்த்தையை கேட்டவன் திடுக்கிட்டான்..

               அதற்குள் வீடு வர தன் வண்டியை நிறுத்தி... பின் அமர்ந்திருந்த அகியை கைபிடித்து இறக்கிவிட்டு அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பி... என்னடா தங்கம் இப்படி சொல்ற?? அண்ணாவ ரொம்ப மிஸ் பண்ணயா???

               அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கண்ணம் தொட... அர்ஜுனின் மார்பில் முகம் புதைத்தாள் அகி...

              ஒரு கையால் அவளை அணைத்தவன் மறுகையால் வண்டியில் இருந்த சாவியை எடுத்து அவளை உள்ளே அழைத்து சென்றான்...

               சோபாவில் அமர்ந்த அர்ஜுன் அகியை தன் அருகில் அமர்த்தி.. என்னடா??? என்றான் அவள் முகம் நிமிர்த்தி...

                வேறு எதுவும் பேசாமல் அவனின் மடியில் படுத்தவள் அவனின் வயிற்றை சுற்றி கையை போட்டு இறுக்க கட்டிக் கொண்டாள்... அது அந்த வீட்டில் இயல்பு என்பதாள் அவனும் அவளின் முடிகோதி அவளை தூங்க வைத்தான்....

                சிறிது நேரத்தில் அவளை எழுப்பி... குட்டிமா... சாப்ட்டு படு டா.. என்று வற்புருத்தி ஊட்டி விட்டான்.... அண்ணனின் கையால் சாப்பிட எப்போதுமே அகிக்கு பிடிக்கும்... அதனால் அவளும் முறண்டு பிடிக்காமல் உணவை சாப்பிட்டாள்... இருவரும் சாப்பிட்ட தட்டை கிட்சனில் வைத்துவிட்டு வந்தவன் அவளை கைகளில் அள்ளி பெட்ரூமிற்கு சென்று படுக்க வைத்தான்...

                   அண்ணா எங்கயும் போக மாட்டேன்... சரியா.. அமைதியா படுத்து தூங்கு. என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு விலகினான்...

                  அவனின் கையை பிடித்தவள் அவனை போக விடாமல் தடுத்தாள்...

                  என்னடா குட்டி... என்று அருகில் அமர்ந்தவனின் மடியில் படுத்தவள்... என்ன தூங்க வச்சுட்டு போ.. என்று அவனின் இடுப்பை கட்டிக் கொண்டாள்... அவளின் செயலில் புன்னகையுடன் அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான் அவன்..

               அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்...
             

                 

அகல்யாWhere stories live. Discover now