அன்றோடு அர்ஜுன் வரவேற்பு முடிந்து இராமேஷ்வரம் திரும்பி ஒரு மாதம் சென்றிருந்தது.... அகியும் அர்ஜுனும் சேர்ந்து பார்த்த தொழிலை இப்போது அர்ஜுன் மட்டுமே பார்த்தான்... அதனால் அவனுக்கு வேலை கூடியது... வீட்டிற்கு வரும் நேரமும் பின் தங்கியிருந்தது.... ஆனால் எவ்வளவு வேலை பார்த்தாலும் அவனுக்கு கீர்த்தி நினைவாகவே இருந்தது.. அன்றும் அப்படிதான்.... வேலை முடிந்து இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்பியவன்..... கீர்த்தியின் நினைவுடன் வீட்டிற்குள் நுழைந்தான்..எப்போதும் அவன் வரும் வரை காத்திருந்து அவனை வரவேற்கும் அம்மா அன்று ஹாலில் இல்லை... எதோ மனதிற்கு நெருடலாக இருக்க.... வேகமாக அவர் அறை நோக்கி ஓடினான்.... அவன் பயந்தது போலவே அங்கு அம்மா மயங்கி கிடந்தார்...
ஒரு நொடி திகைத்தவன்... மறுநொடி அவரை கைகளில் ஏந்திக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்....
கிருபாவும் அகியும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்....
அப்போது கிருபாவின் போன் அழைத்தது.... தூக்கம் கலைந்து புரண்டு படுத்தவன்... அகியின் தூக்கம் கெடாமல் போனை எடுத்து பார்த்தான்... அர்ஜுன் காலிங் என்று வந்ததும்... ஒரு படபடப்பு அவனை ஆட்கொள்ள... வேகமாக போனை எடுத்து என்ன மச்சான்?? இந்த நேரத்துல?? என்று கேட்டவனுக்கு பதில் அர்ஜுனின் அழுகையே பரிசாக கிடைத்தது....
ஹேய் அர்ஜு... என்ன டா?? என்ன ஆச்சு?? மச்சான்... என்னனு சொல்லேன்... என்று படபடப்போடு கிருபா கேள்வி கேட்க.. அவனின் குரலில் விழித்த அகி.. என்ன கிருபா?? என்றாள் தூக்க கலக்கத்துடன்....
அகி.. இங்க பாரு அர்ஜுன் போன்ல.. அழுறான்.. என்று அவளிடம் போனை கொடுத்தான் அவன்..
அர்ஜுன் அழுகிறான் என்ற பதிலில் திகைத்தவள்... ஹலோ அண்ணா.. என்ன ஆச்சு?? ஏன் அழுற?? என்றாள் பதட்டமாக...
குட்டிமா... குட்டிமா.. அம்மா.. அம்மா... நம்மல விட்டு போய்ட்டாங்க டா.. என்று கூறியவன் கதறி அழ ஆரம்பித்தான்....