கீர்த்தியை அந்த நிலையில் பார்த்த அர்ஜுனிற்கு இதய துடிப்பே ஒரு நிமிடம் நின்று விட்டது.... வேகமாக அவளிடம் விரைந்தவன் அவளை கைகளில் ஏந்தி காரை நோக்கி ஓடினான்....கீர்த்தியையே பாரத்துக் கொண்டிருந்த அகியும் அவர்களிடம் விரைய கிருபா அவளை பின் தொடர்ந்தான்....
கிருபா காரை ஓட்ட அவன் அருகில் அகி அமர்ந்திருக்க... பின் சீட்டில் கீர்த்தியை தன் மடியில் அமர்த்திய அர்ஜுனின் கண்கள் கண்ணீரை பொழிந்துக் கொண்டிருந்தது....
கீர்த்திக்கோ வலி உயிர் போனது... அவள் அத்தான்.. அத்தான்.. என்று சிணுங்கிக் கொண்டே ஆழமாக அவன் மார்பில் முகத்தை புதைத்திருந்தாள்...
அர்ஜுனின் கண்களுக்கு கிருபாவோ அகியோ சுத்தமாக தெரியவில்லை... அவனிற்கு தெரிந்தது எல்லாம் கீர்த்தி வலியில் துடிக்கிறாள் என்பது மட்டுமே...
குட்டிமா.. குட்டிமா... வலிக்குதா டா??? ஒன்னும் இல்ல.. இப்போ ஹாஸ்பிட்டல் போய்டலாம்... சரியா... அழாத டா.. என்று அவள் கண்ணீரை துடைத்தவன்.. அவளின் கால்களை பிடித்துவிட்டான்... அவள் காலின் கட்டை விரலில் தோல் கிழிந்து இரத்தம் வடிந்தது....
கிருபா வேகமாக மருத்துவமனைக்கு சென்று வண்டியை நிப்பாட்ட.. மின்னல் வேகத்தில் அவளை கைகளில் ஏந்தியபடி மருத்துவமனைக்குள் ஓடினான் அர்ஜுன்...
அவனின் செயலை கண்ட கிருபாவிற்கும் அகிக்கும் சிரிப்பு பொங்கியது...
அகி.. நீ போய் அவன சமாளி... என்னமோ அவளுக்கு காலே உடைந்த மாதிரி அங்க போய் ஆடிட்டு இருப்பான்... நான் கார நிப்பாட்டிட்டு வரேன்.. என்று அவளிடம் கூறிச் சென்றான்...
கிருபா சொன்னது போலவே அர்ஜுன் கீர்த்தியை கைகளில் ஏந்தியபடி ஆடிக் கொண்டு தான் இருந்தான்.... பாருங்க சிஸ்டர்... என் குட்டிமாக்கு எப்படி இரத்தம் வருதுனு... நீங்க என்னனா ரொம்ப சாதாரணமா சொல்றேங்க.... டாக்டர வர சொல்லுங்க.. என்று கத்திக் கொண்டிருந்தான்....