♥33♥

4.2K 142 27
                                    


                      தொழில் விஷயமாக அமேரிக்கா சென்ற கிருபா.. அகியின் நினைவால் மிகவும் வாடினான்... அகியை பார்க்க வேண்டும் என்று அவன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் ஏங்கியது.... அங்கு அவன் சந்தித்த நபர் தான் கிஷோர்.. கிஷோர் செம பிரண்ட்லி டைப்... இருவரும் நிறைய விஷயங்களில் ஒத்திருந்தனர்... அதனால் அவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது... அது நாட்கள் செல்ல நல்ல நட்பாக மாறியது...

                 கிஷோர் தன் மாஸ்டர்ஸ் படிப்பை முடித்திருந்தான்... அங்கையே ஆறு மாத பயிர்ச்சியில் இருந்தவன்.. அதும் முடிந்து இன்னும் இரண்டு நாளில் தாய்நாட்டிற்கு கிளம்புவதற்கு பேக் பண்ணிக் கொண்டிருந்தான்.. அப்போது அங்கு வந்த கிருபா...

                என்ன கிஷோர் பேக்கிங்கா???

                ம்ம் ஆமாடா... இன்னும் டூ டேஸ்ல பிளைட்... கிளம்பனும்... நீ எப்ப ஊருக்கு வர்ற?? உன் மிஸஸ்ஸ எனக்கு இன்ட்றோ குடுக்குறேன்னு சொல்லிருக்க மறந்துறாத...

               ம்ம் கண்டிப்பா.. இன்ட்றோ குடுக்குறேன்.. நீயும் என் கூடவே திரும்புனா என்ன... ப்ளீஸ்.. கொஞ்ச நாள் ஒன்னா இருக்களாம்.. என்று கிருபா அவனை கம்பெல் பண்ண அவனும் ஒத்துக் கொண்டான்... அதுவே தன் வாழ்க்கையை முடிக்க போகிறது என்பதை அறியாமல்...

           கிருபாவும் கிஷோரும் நன்றாக ஊர் சுற்றினர் மாலை நேரங்களில்... காலை வேளையில் கிருபா ஆபிஸ் செல்ல... கிஷோருக்கு தூங்குவதே முழுநேர வேலையானது....

          அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது.... டேய் என்னடா பண்ற??? சீக்கிரம் வந்த தொல... நீ ஆடி அசைஞ்சு வர்றதுக்குள்ள பிளைட்ட எடுத்துர போறான்.... பாவம் அகி... அப்புறம்.. உன்ன துவச்சுருவா.. என்று கிஷோர் கிருபாவிடம் கத்திக் கொண்டிருந்தான்....

             ஹிஹி... என்ன மச்சான்.. உன் தங்கச்சிக்கே சப்போர்ட் பண்ற?? அதுக்கு அங்கு ஒருத்தன் குத்துக்கள்ளாட்டம் இருக்கான்.... நி நம்ம சைட் இரு டா... ஐ ஆம் பாவம் இல்ல... என்றான் அருகில் வந்த கிருபா..

            இல்ல டா.. நான் எப்பயும் என் தங்கச்சிக்கு தான் சப்போர்ட்.. என்றான் கிஷோர் காலரை தூக்கி விட்டபடி...

            சப்பா... இந்த கொசு தொல்லை தாங்க முடிலடா சாமி... என்று தலையில் அடித்தவனின் கையை பிடித்து இழுத்து சென்றான் கிஷோர் ஏற்போட்டை நோக்கி....

           இருவரும் ஒன்றாகவே புக் பண்ணியிருந்ததால் பக்கத்து பக்கத்து சீட் கிடைத்து அரட்டை அடித்துக் கொண்டே டிராவல் செய்தனர்... அமேரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இரண்டு நாள் டிராவல் என்பதால்... இருவரும் கதை பேசி சீட்டு விளையாடி மற்ற நேரம் தூங்கி தன் பொழுதை களித்தனர்....

                எல்லாம் ஒன்றரை நாள் பயணம் வரை தான்...

               அன்று நேரம் நடுநிசையை கடந்திருந்தது.... கிருபாவும் கிஷோரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.... டமால் என்ற சத்தத்தில் உறக்கத்தில் இருந்த களைந்தவர்கள் பார்த்தது என்வோ... பிளைட் ஒவ்வொரு பகுதியாக தீப்பிடிப்பதை மட்டும் தான்... கிருபா தன் ஜென்னல் புறமாக திரும்பி கீழே பார்த்தான் சுத்தி காடாக இருந்தது... பிளைட் மலையில் மோதி தீப்பிடித்தது தெரிந்தது.....

               கிருபாவின் நினைவில் இருந்தது என்னவோ அகி மட்டும் தான்... அவளை பார்க்காமல் தன் உயிர் பிரிந்துவிடுமோ.. என்ற பயத்தில் தான் பிழைத்தே ஆக வேண்டும் என்ற வெறி அவனுள் நுழைந்தது....

                கிருபா கிஷோரை இழுத்துக் கொண்டு எமர்ஜென்ஸி எக்ஸிட்டை நோக்கி ஓடினான்... அங்கு சிலர் அந்த கதவை திறக்க முயன்று கொண்டிருந்தனர்.. அவர்களை கஷ்டப்பட்டு விளக்கிவிட்டு கிஷோரை இழுத்தபடி முன் சென்று அந்த கதவை திறந்தான்... திறந்த அடுத்த நிமிடம் பின்னிருந்து அவர்கள் இருவரையும் கூட்டத்தினர் வெளியே தள்ளினர்... கிஷோர் அம்மாஆஆஆஆஆ என்ற கூவலுடனும் கிருபா அகிஈஈஈஈஈ என்ற கூவலுடனும் அந்த காட்டுக்குள் விழுந்தனர்....

           அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்...

             

       

அகல்யாWhere stories live. Discover now